Alaioli
ஒருவரே பல ஆண்டுகள் பிரதமராக இருந்தால் என்ன நடக்கும்? ; உலகமே வியந்த  நஜிப் ஊழல் வழக்கு ; டத்தோ சிவநேசன்

டிகே.மூர்த்தி,

ஈப்போ, மார்ச் 3-பிரதமர் பதவிக் காலத்தை இரு தவணைகள் என்ற உரிய-உயரிய நாட்டுப்பற்றுடன் நடப்பு ஒற்றுமை அரசின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இந்த புதிய அரசியலமைப்பு சட்ட விதி திருத்தத்தை முன்னெடுக்கும் வகையில் நேற்று (02.03.2026) நாடாளுமன்ற அவையில் மசோதவை முன்மொழிந்தார். பிரதமர் கொண்டு வந்த  மசோதவை ஏற்றுக்கொண்ட துணை சபாநாயகர் (ALICE LAU) நாட்டு மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு அச்சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனநாயக மரபின் வழி வாக்களிப்புக்கு  அனுமதித்துள்ளார். 


நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பு முடிவின்படி  மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கப்பெறாமல் பிரதமர் கொண்டுவந்த சட்டத்  திருத்தம் தோல்வியில் முடிந்தது. பிரதமருக்கு 146 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில், அதிகப் பெரும்பான்மைக்கு இன்னும் 2 வாக்குகள் அதாவது 148 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருந்தால் அந்த புதிய அரசியலமைப்புச் சட்டம் அவையில் நிறைவேற்றப் பட்டிருக்கும். மலேசிய நாடாளுமன்றம் இங்கிலாந்து நாடாளுமன்ற (WESTMINSTER) சட்ட விதிகளின்படி தான் அவைத் தலைவரால் நடத்தப்படுகிறது.  


அந்நிலையில், முக்கியமாக ஒற்றுமை அரசாங்கத்தைச் (தேசிய முன்னணி) சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் ( பேரா தாப்பா (P.H.) நாடாளுமன்ற உறுப்பினர் (மஇகா) சரவணன் முருகன் மற்றும் ஜோகூர் செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர்  (அம்னோB.N.) இஷாமுடின் ஹுசேன்) நடைபெற்ற வாக்களிப்பில் அரசாங்கப் பிரதிநிதியாகவும் பங்குபெறாமல்  ஒளிந்துக் கொண்டிருப்பதை இந்த நாட்டு இந்திய சமூகத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் மஇகா இந்தியர்களின் கட்சி  என்ற நம்பிக்கை இழந்துள்ளது என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் “அலை ஒளி” சமூக ஊடகச் செய்தியாசிரியரிடம் விவரித்தார். 


மஇகா என்றால் மலேசிய இந்திய சமுதாயம் என்ற வீரவசனம் பேசுபவரும், பாரிசான் நேஷனல் சார்பில் கடந்த 2008-2022 நான்கு தவணைகளாக  பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத்தில் வெற்றிப் பெற்றவர். மஇகா என்றால் இந்திய சமுதாயம் என்ற வீர வசனம் பேசியவர், நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதவுக்கு தப்பாமல் வாக்களிக்க வேண்டிய தாப்பா சரவணன் வாக்களிப்பில் பங்கேற்காமல் போனது அவருக்கும் மட்டுமல்ல, நம்பி அவருக்கு வாக்களித்த தாப்பா தொகுதி பல்லின மக்களுக்கும், துணைத் தலைவர் பதவி வகிக்கும் மஇகாவுக்கும் பெருத்த எமாற்றத்தைத் தேடித் தந்துள்ளார் என்றும் டத்தோ சிவநேசன் கடுமையாகவும் சாடியுள்ளார். 


வாக்களிப்பு நேரத்தில் வாக்களிப்பை தவிர்க்கும் உள்நோக்கத்தில் காணாமல் போன அரசு தரப்பைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சரவணனும் ஒருவர் என்ற சமூக ஊடகங்களில் வெளியான செய்தி  உண்மைச் செய்தியாகும். அதே வேளையில், ஜசெக சார்பில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (நூறு சதவீதம்) நாட்டின் எதிர்காலத்தை மையமாகவும் வைத்து பிரதமர் கொண்டுவந்த மசோதவை ஆதரித்து வாக்களித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்க நாடாளுமன்றத்திலும், மாநில சட்ட மன்றங்களிலும் மக்களின் சார்பில் விசுவாசமுடன் இருக்கின்றோம் என்றார் அவர். ஜசெக கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நாங்கள் துளியளவும் துரோகம் நினைத்ததில்லை. 


மசோதா என்பது அரசாங்க மசோதா, மற்றொன்று தனிநபர் மசோதா என இரண்டு பிரிவுகள் உள்ளடக்கியுள்ளன. நேற்று நடந்தது அரசாங்க மசோதா. அதுவும் நாட்டுப் பிரதமர் கொண்டுவந்த மசோதவை மதிக்கவில்லை என்றால், இந்த தலைகுனிவு தாப்பா தொகுதி மக்களுக்கு தான். இந்த மசோதா மூலம் நாட்டுக்குத்  தேவைப்படும் முக்கியமான மசோதா என்பது சரவணனுக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. 22 ஆண்டுகள் துன் மகாதீர் முகமது பிரதரமாக அரசாங்கத்தை நடத்தினார். அவருக்கு அடுத்த டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காலத்தில், நடந்த மிகப்பெரிய அளவில் நாட்டையே சூறையாடிய ஊழல் சம்பவம் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு மூலம் உலக நாடுகள் வியந்தன. 


அப்படிப்பட்ட சூறையாடல் சம்பவம் மீண்டும் நாட்டில் நடைபெறக்கூடாது என்றுதான் பிரதமர் இந்த இரு தவணைக்கால பிரதமர் பதவிக்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற அவைக்கு கொண்டு வந்தார். பினாங்கில் ஒருவர் இரு தவணைக் காலமட்டும் தான் மாநில முதலமைச்சர் பதவியில் இருக்க வேண்டும் என்று  இதே போன்று சட்ட மசோதா மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகோபித்த முடிவு எடுத்தனர். பினாங்கில் 5 வது முதலைமைச்சராக உள்ள நடப்பு முதல்வர் (ஜசெக) செள கோன் இயோவ் தனது பதவி காலம் முடிய ஓராண்டு எஞ்சியுள்ளது. இந்த திட்டம் பினாங்கு மாநில வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது என்றும் டத்தோ சிவநேசன் சுட்டினார்.

Post Image

Leave a Comment
Trending News