Alaioli
கடல் கடந்த நாடுகளில் இருந்து கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட 119 டன் சட்ட விரோதக் கழிவுப் பொருட்கள் தடுப்பு வைப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்.

போர்ட் கிள்ளான் ( கோலக்கிள்ளான்)  மார்ச் 3.  கடல் கடந்த நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக கப்பல்களில் கொள்கலன்கள் வாயிலாகத் கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு சட்டவிரோதக் கழிவுப் குப்பைப் பொருட்களை போர்ட் கிள்ளான் கடல் எல்லை கண்காணிப்பு அதிகாரி டிசிபி டத்தோ நிக் எஸானி முகமட் ஃபைசால் இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


கடல் கடந்த பல்வேறு நாடுகளில் இருந்து 21 கொள்கல்ன்களில் இங்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்ட விரோதக் கழிவுக் குப்பைகள் சட்டத்தை மீறி இவ்விடத்தில் கொள்கல்கலன்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் இதற்கு காரணமான அந்த நபர்களை காவல் துறையினர் தேடிப் பிடித்து உரிய தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ள விருப்பதாக அவர் கூறினார்.


போர்ட் கிள்ளான் வட பகுதி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் துறைமுக அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்ட போது கிடைக்கப் பெற்ற தகவலை டிசி பி நிக் எஸானி, அதன் விவரங்களை இந்தச்சந்திப்பில் வெளியிட்டார். 4 கொள்கலன்களில் 89 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேவையில்லாமல் தூக்கி யெறியப்படும் அல்லது புதைக்கப் படும் தகுதிப் பெற்ற கழிவு குப்பைப் பொருட்கள் மற்றும் ஒரு கொள்கலனில் 30, 200 கிலோ எடையுள்ள பயன்படுத்த முடியாத மின் வடங்கள் என்று அவர் கூறினார். 


எல்லா கொள்கலன்களிலும் பரிசோதனை மேற்கொண்டதில் மொத்தமாக 119, 200 கிலோ எடையுள்ள பயன்படுத்த முடியாத அனைத்தும் சட்ட விரோதக் குப்பைகள் என்று அவர் தெரிவித்தார். 1974 ஆம் ஆண்டின் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்பட்ட நபர்களை  வலை வீசிப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று டிசிபி நிக் எஸானி கூறினார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News