Alaioli
அகல்யா
பிறை,ஏப் 14 -தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிக்கும், எழுத்தாளர்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் பெருமகனார் டாக்டர் சின்னையா வரலாறு கண்ட சகாப்தம் நூல் வெளியீட்டு விழாவில் பினாங்கு, கெடா என இரு மாநிலங்களிலும் முதல் பிரதியைப் பெற்று தமிழுக்கு மகுடம் சூட்டி உள்ளார்.
பினாங்கு செந்தமிழ்க் கலா நிலையத்தின் ஏற்பாட்டில், பிரபல சமூகச் சிந்தனையாளர் டத்தோ டாக்டர் ந. ஞானபாஸ்கரன் எழுதிய ‘வரலாறு கண்ட சகாப்தம்’ எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிரம்மாண்டமான வெளியீட்டு விழா பிறை, ஜாலான் பாரு அருள்மிகு முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக விழாவினை வட மாநில பொது இயக்கங்களின் புரவலர் டாக்டர் சின்னையா மற்றும் அவர்தம் துணைவியார் குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு நூலினை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து வைத்தார்.

அபூர்வ சாதனை என்று எடுத்துக்கொண்டால் இரு மாநிலங்களிலும் முதல் பிரதியை டாக்டர் சின்னையா இனையர்கள் பெற்று பேராதரவு வழங்கினர்.
இவ்விழாவின் முத்தாய்ப்பாக, டத்தோஸ்ரீ சுந்தராஜுவிடமிருந்து நூலின் முதல் பிரதியினை டாக்டர் சின்னையா பெற்றுக்கொண்டாதம், முன்னதாக, கெடா மாநிலத்தில் நடைபெற்ற இதே நூலின் அறிமுக விழாவிலும் இவரே முதல் பிரதியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நூலின் வெளியீட்டு விழாக்களில் இரு மாநிலங்களில் முதல் பிரதியைப் பெற்று அவர் புதியதொரு சாதனையையும், தமிழ் இலக்கியத்தின் மீதான தனது பற்றையும் நிலைநாட்டியுள்ளார்.
டாக்டர் சின்னையா தமிழ்ப்பணிகளின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகிறார். அவர் வெறும் தொழிலதிபர் அல்லது தமிழ்ப் பள்ளிகளுக்கு புரவலர் என்பதைத் தாண்டி, தமிழினத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் தீராத பற்று கொண்டவர்;அவரது சேவைகள் குறித்து விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு நூல் வெளியீடு விழாவை சிறப்பித்தார். மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் அவர் ஓயாது உழைத்து வருகின்றார்.

மேகும் நூலாசிரியர் இந்த நூல் விற்பனையின் மூலம் கிடைக்கும் நிதி கல்வி உதவிக்கு வழங்கப்படுவது, அவரது கல்விச் சேவைக்கு மேலும் வலுசேர்க்கிறது.
எழுத்தாளர்களின் தோழன், தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிப்பதிலும், அவர்களின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அவர் எப்போதும் முன்னணியில் இருக்கிறார். எழுத்துலகம் செழிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் அவர் ஆற்றி வரும் பணிகள் மகத்தானவை.
உணர்வுப்பூர்வமான சேவை. எவ்வித விளம்பரமுமின்றி, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ்க் கலை கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் அவர் ஆற்றி வரும் உணர்வுப்பூர்வமான சேவைகள் இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ ஜெ. தினகரன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் கீழ்க்காணும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டத்தோஸ்ரீ ஆர்.ஏ. அருணாசலம்
டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் (முனீஸ்வரர் ஆலயத் தலைவர்)
மேஜர் மு. சேகரன்
அலெக்ஸ் (டத்தோ ஹென்றி பெனடிக்ட் சார்பில்)
டத்தோ மரியதாஸ் கோபால்
டத்தோ ஹரிகிருஷ்ணன் (ஸ்ரீ ஆனந்த பவன் உரிமையாளர்)
பினாங்கு மாநில எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள். நூலாய்வு மற்றும் ஏற்புரை
மக்கள் ஓசை நாளிதழின் பேராக் மாநில செய்தியாளர் கவின்மலர், நூலினை நுணுக்கமாக ஆய்வு செய்து சிறப்புரையாற்றினார்.
நூலாசிரியர் டத்தோ டாக்டர் ந. ஞானபாஸ்கரன் தனது ஏற்புரையில், எனது கடந்த கால அரசியல் அனுபவங்கள், மறைந்த மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுடனான நட்பு மற்றும் சமூக நலனை நோக்கமாகக் கொண்டே இந்த நூலை உருவாக்கியுள்ளேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விழாவின் நிறைவாக, வாசகர்கள் பலரும் ஆர்வத்துடன் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நூல், வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.-Alaiolinews


சிலாங்கூர்
மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனம் சிறப்பு!- வீ.கணபதிராவ் நெகிழ்ச்சி
மலேசியா
பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..!
ஜொகூர்
22 ஆண்டுகள் கல்விச் சேவையில் பெருமை சேர்த்த சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் – எஸ்.பி.எம் 2025 தேர்வில் 53 மாணவர்கள் நேரடி A
பினாங்கு
வரலாறு கண்ட சகாப்தம் - பினாங்கு, கெடா என இரு மாநிலங்களிலும் முதல் பிரதியைப் பெற்று டாக்டர் சின்னையா சாதனை!
சிலாங்கூர்
சித்திரைப் புத்தாண்டு மலர்ச்சி யில் ஆலய வழிபாடும் மன நிறைவை அளித்தது!- மாதவன் முனியாண்டி நெகிழ்ச்சி
சிலாங்கூர்
மாநில அளவில் நியமனம் பெற்ற 55 இந்தியர் சமூகத் தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்களது சேவையை விரிவுப்படுத்த வேண்டும்- பாப்பா ராய்டு அறிவுறுத்து.
ஜொகூர்
14 pelajar, dua wanita dewasa gaduh depan sekolah didakwa di mahkamah
மலாக்கா
Pemandu bas pangku wanita atas riba dikenal pasti sebagai suami orang, giat diburu polis