Alaioli
மாநில அளவில் நியமனம் பெற்ற 55 இந்தியர் சமூகத் தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்களது சேவையை விரிவுப்படுத்த வேண்டும்- பாப்பா ராய்டு அறிவுறுத்து.

எஸ்.எஸ்.மணிமாறன்

களும்பாங் ஏப்ரல் 14 - சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தின் வாயிலாக 2026- 2027 ஆகிய ஈராண்டுகள் இந்தியர் சமூகத் தலைவர்களாக நியமனம் பெற்ற 55 பேரும் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் நலனை கருத்தில் கொண்டு எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதே வேளையில் அதற்கான தீர்வை காண்பதற்கு மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு வர வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளியிடம் தெரிவித்தார். 


இங்கு, களும்பாங் ஸ்ரீ டாமாய் ரிசோட்டில் நடைபெற்ற இந்தியர் சமூகத் தலைவர்கள் மேன்மைக்காகவும்  மக்கள் சேவையை சிறப்பாக வழி நடத்திச் செல்வதற்கும் உரிய பயிற்சியான, இன்டக்ஸி பயிற்சிப்பட்டறையைத் தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கிய அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.



இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட 55 இந்தியர் சமூகத் தலைவர்கள் பயிற்சி நிறைவின் போது, அதற்கான நற்சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.


நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கிய பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு , தொடரும் மக்கள் நலச் சேவையில் இந்தியர் சமூகத் தலைவர்கள் தங்களது பணிகள் சிறப்பாக அமையப் பெற வேண்டும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.


அவரது சிறப்பு அதிகாரி திருமதி காந்திமதி நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கி உதவினார்.- Alaiolinews


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News