Alaioli
பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..!

டிகே.மூர்த்தி

ஈப்போ, ஏப்ரல் 14- 2026 ஆம் ஆண்டிற்கான பேரா மாநில சட்டமன்றத்திற்கான முதல் தவணை கூட்டத் தொடரை இன்று (14.04.2026) காலை மாநில அரசாங்க கட்டிட வளாகத்தில் நடந்த போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டப் பிறகு, பேராக் மாநில (Duli Yang Maha Mulia Paduka Seri Sultan Perak Nazrin Muizzuddin Shah) மாட்சிமை தங்கிய சுல்தான் நஜ்ரின் ஷா அவர்கள் அதிகாரப்பூர்வமாகவும் திறந்து வைத்துள்ளார். 


இந்த நிகழ்வுக்குப் பிறகு, மாநில சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள 5 தமிழர்கள், (ஆட்சிக்குழு உறுப்பினர்) சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம், தம்புன் சட்டமன்ற உறுப்பினர் அரபாட், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், மாலிம் நாவார் (கம்பார்) பவானி வீரையா, ஊத்தான் மெலிந்தாங் சட்டம் மன்ற உறுப்பினர் வசந்தி சின்னசாமி, அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் சட்டமன்ற துணை சபாநாயகர் Jenny Choy ஆகியோர் ஒன்றிணைந்து சித்திரை மாதம் முதல் நாளையொட்டி (14.04.2026) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை ஊடகத்தாரிடம் தெரிவித்தனர்.-Alaiolinews


Leave a Comment
Trending News