Alaioli
மாநில அரசின் ஏற்பாட்டில் வைசாக்கி சீக்கியர் புத்தாண்டு பண்பாட்டுக்கலைவிழா நாளை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும் -பாப்பா ராய்டு அழைப்பு

எஸ்.எஸ்.மணிமாறன் 

ஷா ஆலம், ஏப்ரல் 18 -  சிலாங்கூர் மாநில அரசின் ஒருமித்த ஏற்பாட்டில் வைசாக்கி நாளை 19.4.2026 ஞாயிறு அன்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 வரை,  வைசாக்கி சீக்கியர் புத்தாண்டு பண்பாட்டுக்கலைவிழா லாமான் பெட்டாலிங் ஜெயா (எம்பிபிஜே முன்புறம்)  நடைபெற விருப்பதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


சீக்கிய வம்சாவளியினர் கொண்டாடும் வைசாக்கி புத்தாண்டை முன்னிட்டு அவர்களின் கலை கலாச்சாரம் பண்பாடு போன்ற அம்சங்களுடன் அடங்கிய கலை விழாவாக அமைய இந்த நிகழ்ச்சி நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அலை ஒளியிடம் கூறினார்.


பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில், சீக்கிய இனத்தவரையும் கௌரவித்து பெருமைப்படுத்தும் நோக்கத்தில் சிலாங்கூர் மாநில அரசு இந்த நிகழ்ச்சியை நாளை படைக்க விருப்பதாக பாப்பா ராய்டு தமது எண்ணத்தைப் பதிவு செய்தார்.


எனவே, இலவசமாக அரங்கேறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தாம் அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்தார்.-Alaiolinews

Leave a Comment
Trending News