Alaioli
பந்திங் சித்தி விநாயகர் ஆலயத்தில் நாயன்மார் பெருவிழா

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 18 - நாளை 19.4.2026 ஞாயிறு அன்று காலை 7.30. மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை, பந்திங் தெலுக் பூனுட் சாலையில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நாயன்மார் பெருவிழா நடைபெற இறையருள் சித்தம் கூடியுள்ளது. 


தலைநகர், சைவத் திருக்கோயில் கலை,கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் சிறப்பு சொற்பொழிவு வழங்குகிறார்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்கு காலைச் சிற்றுண்டி, மதிய உணவும் வழங்கப்படும்.   ஸ்ரீ மஞ்சா சைவ சமய மன்றம், நீலாய் சைவ சமய மன்றம், தாமான் செந்தோசா சைவ சமய மன்றம், சிலாங்கூர் சைவ சமய மன்றம் ஆகிய சமய அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் நிகழ்ச்சி குறித்த நேரத்தில் நடைபெறும் என்று சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 


மேலதிக விபரங்களுக்கு.. சிவத்திரு பூபாலன் பூவன்...012 975 7962.      சிவத்திரு லாசினி பாரதி தாசன்...014  646 0384. - Alaiolinews

Leave a Comment
Trending News