Alaioli
செமினி, இனிய நந்தவன இலக்கியச் சோலையில் மூவருக்கு தமிழ்மாமணி விருது

எஸ்.எஸ்.மணிமாறன்

செமினி, ஏப்ரல் 18 -  இனிய நந்தவனம் திங்களிதழின் 29 ஆம் ஆண்டு நிறைவையொட்டி செமினி இலக்கியச் செல்வர் நா.ஆ. செங்குட்டுவன் அறிவுச் சோலையில் நாளை 19.4.2026 ஞாயிறு அன்று மாலை 5.30 மணி தொடக்கம் வெளியீடு காணவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் ஊடே இனிய நந்தவனம் இலக்கியச் சோலையில் சிலாங்கூர் மாநில அளவில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழுக்கும் சமூக நலத்திற்கும் இடை விடாது தொண்டாற்றி வரும் திருமதி புஷ்பராணி கிருஷ்ணன்( தலைமையாசிரியர், ஆர் ஆர் ஐ தமிழ்ப் பள்ளி) திருமதி ஜெகதீஸ்வரி வேலு  (கெ அடிலான் மகளிர் தலைவி, பெஸ்தாரி ஜெயா) திருமதி புஷ்பா நாகையா வெங்கடேசன் ( கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர்) ஆகிய மூவருக்கும் தமிழ்மாமணி எனும் சிறப்பு விருது வழங்கப் பட்டு கௌரவிக்கப்பட விருக்கின்றனர் என்று ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் இனிய நந்தவனம் ஆசிரியர் , இனிய நந்தவனம் சந்திரசேகரன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

 


இந்த நிகழ்ச்சி, செமினி சிற்றூரில், 3-1, ஜாலான் செமினி சென்ட்ரல் 6, செமினி சென்ட்ரல் எனும் முகவரியில் நடைபெறும் என்று அவர் அலை ஒளியிடம் குறிப்பிட்டார்.- Alaiolinews


Post ImagePost Image

Leave a Comment
Trending News