Alaioli
மலையாளி சமூகத்துடன் உரையாடிய ரவீன் குமார் – ஒற்றுமை முக்கியம் என வலியுறுத்தல்

கே.கே.ஆர்.தேவி

ஜோகூர், ஏப்.18 – ஜோகூர் மலையாளி சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பில் ஜோகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆட்சிக்குழு தலைவர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தார்.


இச்சந்திப்பு ஒற்றுமை உணர்வை முன்னிறுத்தும் வகையில் அமைதியான முறையில் நடைபெற்றது. சுல்தானா ரொஹாயா அறக்கட்டளை தலைவர் டத்தோ சுகுமாரனும் இதில் பங்கேற்றார்.



ஜோகூர் மாநிலம் முன்னேற்றப் பாதையில் நகர மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.


பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைச் செலவை சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகள், சமூக நலத்தை மேம்படுத்தும் திட்டங்கள் பற்றியும் அவர் கூறினார்.


இந்த சந்திப்பு சமூக அமைப்புகள் இடையே புரிதலை வளர்க்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். கருத்து பரிமாற்றம் மூலம் நல்லிணக்கம் வலுப்பெறும் எனவும் குறிப்பிட்டார்.


நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த சங்க தலைவர் கே. அறுமுகத்தின் பங்களிப்பு பாராட்டப்பட்டது.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News