Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம் ஏப்ரல் 14 - சித்திரைப் புத்தாண்டு பிறந்த மலர்ச்சியில் இணைந்த ஆலய வழிபாடும் இறைவன் தரிசனமும் மனதை இலகுவாக அதே வேளையில், ஒரு ஆரோக்கியமான புத்துணர்ச்சியைத் அளித்தது என்று சிலாங்கூர் மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருள் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இன்று, காலையில் இங்கு கோத்தா கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, மலர்ந்துள்ள சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் தொழில் துறைகளில் ஏற்றத்தையும் எழுச்சியையும் அதே வேளையில் ஆரோக்கியமான வளமான வாழ்க்கைத் தரத்தையும் அதற்கேற்ப பொருளாதார வளர்ச்சியை உயர்த்தி அமைத்து தர வேண்டும் என்று எல்லாம் வல்ல அம்பிகையிடம் தாம் தாழ்மையான வேண்டுகோளை முன் வைத்ததாக அவர் கூறினார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஆலயத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த சிறப்பு வழிபாட்டில், கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், சிலாங்கூர் மாநில ம இகா தலைவர் டத்தோ சங்கர் அய்யங்கார், ஷா ஆலம் பண்டாராயா உறுப்பினர் நதிந்திரன் ராஜ் பாஸ்கரன், சிறப்பு அதிகாரி கோபால் முனியாண்டி, கோத்தா கெமுனிங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் மக்கள் பிரதிநிதி பத்துமலை அம்மாசி, கோத்தா மக்கள் குடியிருப்பாளர்கள் மஞ்சள் அமைப்பின் தலைவர் ராஜன் அப்பாவு ஆகியோர் உடன் கலந்து கொண்டு அர்ச்சனைக்குப் பிறகு அனைவரும் அர்ச்சகரிடம் இருந்து சிறப்பு பூஜையில் வைக்கப் பட்டிருந்த காளாஞ்சிகளைப் பெற்றுக் கொண்டதாக மாதவன் அலை ஒளியிடம் தெரிவித்தார்.-Alaiolinews

சிலாங்கூர்
மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனம் சிறப்பு!- வீ.கணபதிராவ் நெகிழ்ச்சி
மலேசியா
பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..!
ஜொகூர்
22 ஆண்டுகள் கல்விச் சேவையில் பெருமை சேர்த்த சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் – எஸ்.பி.எம் 2025 தேர்வில் 53 மாணவர்கள் நேரடி A
பினாங்கு
வரலாறு கண்ட சகாப்தம் - பினாங்கு, கெடா என இரு மாநிலங்களிலும் முதல் பிரதியைப் பெற்று டாக்டர் சின்னையா சாதனை!
சிலாங்கூர்
சித்திரைப் புத்தாண்டு மலர்ச்சி யில் ஆலய வழிபாடும் மன நிறைவை அளித்தது!- மாதவன் முனியாண்டி நெகிழ்ச்சி
சிலாங்கூர்
மாநில அளவில் நியமனம் பெற்ற 55 இந்தியர் சமூகத் தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்களது சேவையை விரிவுப்படுத்த வேண்டும்- பாப்பா ராய்டு அறிவுறுத்து.
ஜொகூர்
14 pelajar, dua wanita dewasa gaduh depan sekolah didakwa di mahkamah
மலாக்கா
Pemandu bas pangku wanita atas riba dikenal pasti sebagai suami orang, giat diburu polis