Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கிள்ளான், ஏப்ரல் 14- மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனமும் வழிபாட்டின் சிறப்பும் இறைவனை வேண்டி பக்தியுடன் வணங்கும்போது நமக்குள் அது ஒரு நிறைவை தருகிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் அலை ஒளி செய்தியாளரிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பராபவ ஆண்டின் புதிய தொடக்கமாக மலர்ந்திருக்கும் சித்திரை மாதத்தின் முதல் நாளில், காலை நேரத்தில் இங்கு அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிலும் அதே வேளையில் அருள் மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்புப் பூஜையிலும் தாம் குடும்பத்துடன் பங்கேற்று இறையருளைப் பெற்றதாக அவர் கூறினார்.
பிறந்திருக்கும் புத்தாண்டில், அனைவருக்கும் எல்லா வளமும் ஆரோக்கியமும் வழங்கி அருள வேண்டும் என்று இந்த வழிபாட்டில் தாம் கோரிக்கையை முன்வைத்து வேண்டிக் கொண்டதாக கணபதிராவ் அலை ஒளியிடம் கூறினார்.

மாநில அளவில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்று கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தாம் பகிர்ந்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.-Alaiolinews

ஜொகூர்
23 மணி நேர திட்டமிட்ட நீர்விநியோக நிறுத்தம் – ஜோகூர் பாரு உட்பட 3 மாவட்டங்களுக்கு அறிவிப்பு
கோலாலம்பூர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் சேவையாற்றி வரும் டத்தோ கருணாநிதிக்கு பதவி உயர்வு
ஜொகூர்
மலையாளி சமூகத்துடன் உரையாடிய ரவீன் குமார் – ஒற்றுமை முக்கியம் என வலியுறுத்தல்
சிலாங்கூர்
செமினி, இனிய நந்தவன இலக்கியச் சோலையில் மூவருக்கு தமிழ்மாமணி விருது
சிலாங்கூர்
மாநில அரசின் ஏற்பாட்டில் வைசாக்கி சீக்கியர் புத்தாண்டு பண்பாட்டுக்கலைவிழா நாளை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும் -பாப்பா ராய்டு அழைப்பு
சிலாங்கூர்
மாநில விவசாயிகள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடினுக்கு பாராட்டு
திருக்கோவில்
பந்திங் சித்தி விநாயகர் ஆலயத்தில் நாயன்மார் பெருவிழா
ஜொகூர்
ஜோகூர் இளைஞர்களை இணைக்கும் புதிய முயற்சி – மோகன் அருணாசலம் அழைப்பு