Alaioli
உத்திரகோசமங்கை திருக்கோவிலில் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பரதநாட்டிய விழா

ஆர்.ரமணி

இராமநாதபுரம், ஏப்ரல் 14: தமிழக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்திரகோசமங்கை திருக்கோவில் தரிசனம் செய்த தருணத்தில், மனதை நெகிழ்விக்கும் வகையில் சிறப்பான பரதநாட்டிய விழா கண் நேர்ந்ததாக அலை ஒளி ஊடகத்தின் இயக்குநர் ஆர்.ரமணி தெரிவித்தார்



தமிழகத்தின் பல பகுதிகளான சென்னை, மதுரை, சிவகாசி உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த மாணவர்கள் இணைந்து இந்த விழாவில் கலந்துகொண்டனர். 4 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் கலைஞர்கள் தங்கள் திறமைகளை அசாத்தியமாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.


குறிப்பாக மதுரையைச் சேர்ந்த கவினி மற்றும் திவாஷினி மாணவிகள், சொக்கநாதர்–மீனாட்சி சுந்தரேஸ்வரர் வடிவில் ஆடிய நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.


சிவகாசியிலிருந்து 20 மாணவர்களுடன் கலந்து கொண்டதாகவும், இவ்விழாவில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும், பரதநாட்டிய பயிற்சியாளர் திருமதி ஐஸ்வரியா தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சி அவர்களின் ஆசிரியை திருமதி ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றதாகவும் கூறினார்.


இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த பரதநாட்டிய விழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைக்கும் இளம் தலைமுறையின் அர்ப்பணிப்பிற்கும் சிறந்த சான்றாக அமைந்தது.-Alaiolinews


Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News