Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
ஷா ஆலம் மார்ச் 3. சிலாங்கூர் மாநில அளவில் இருக்கும் பி 40 பிரிவைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள இந்திய மாணவர்கள் உயர் கல்வி நிதியைப் பெற வரும் 13.3.2026 க்குள் விண்ணப்பங்களை ப் பரிசீலனைக்காக விரைந்து அனுப்பி வைக்கும்படி மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் நினைவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார். காலம் கடந்து அனுப்பி வைக்கும் மனுக்கள், மற்றும் போதிய விவரங்கள் இல்லாத விண்ணப்பங்களும் பரிசீலனையின் போது நிராகரிக்கப் படக் கூடும் என்று அவர் கூறினார்.
அரசின் மேற்பார்வையில் அமைந்துள்ள உயர்கல்விக் கூடங்களில் மற்றும் தனியார் கல்விக் கூடங்களில் பயிலும் 25 வயதுக்குட்பட்ட சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த இந்திய மாணவர்கள் கல்வி உதவிநிதிக்கு மனு செய்யலாம் என்று பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். முதலாம், இரண்டாம் ஆண்டில் இளங்கலை பயிலும் பட்டதாரி மாணவர்கள், முதலாம் ஆண்டில் பயிலும் டிப்ளோமா மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஏற்கனவே, மாநில அரசு மற்றும் இதர நிதி நிறுவனங்கள் வாயிலாக கல்வி உதவி நிதி ப் பெற்ற மாணவர்கள் இதற்கு மீண்டும் மனு செய்ய இயலாது என்று அவர் அலை ஒளியிடம் கூறினார்.
இந்திய மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தேவையான அனைத்து விவரங்களும் அடங்கிய மனு பாரங்களை வரும் மார்ச் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குள் ஷா ஆலம் மாநில அரசு செயலகத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்கும் படி பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார். மேலதிக விவரங்களுக்கு...03..5544 7307/ 03 5521 2544 என்ற எண்கள் வாயிலாகவும், excoofficepapparaidugmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
உத்திரகோசமங்கை திருக்கோவிலில் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பரதநாட்டிய விழா
மலாக்கா
Pemandu bas, kenalan wanita janji hadir beri keterangan di IPD Jasin pada Rabu
பிரசில்
Pemain bola sepak ditahan, jerit ‘bom’ dalam pesawat di Brazil
மலேசியா
உலகத் தமிழ் உறவுகளுக்கும் உள்நாட்டு தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்......
சிலாங்கூர்
மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனம் சிறப்பு!- வீ.கணபதிராவ் நெகிழ்ச்சி
மலேசியா
பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..!
ஜொகூர்
22 ஆண்டுகள் கல்விச் சேவையில் பெருமை சேர்த்த சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் – எஸ்.பி.எம் 2025 தேர்வில் 53 மாணவர்கள் நேரடி A
பினாங்கு
வரலாறு கண்ட சகாப்தம் - பினாங்கு, கெடா என இரு மாநிலங்களிலும் முதல் பிரதியைப் பெற்று டாக்டர் சின்னையா சாதனை!