Alaioli
காப்பார் தெண்டாயுதபாணி பங்குனி உத்திர திருவிழா பால் குட பக்தர்களுக்கு தண்ணீர்ப் பந்தல்=. புஷ்பா ராஜன் தகவல்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

காப்பார் ஏப்ரல் 3.  இங்கு, காப்பார் சிற்றூரில் பக்த மெய்யன்பர்களுக்கு எழிலாட்சி செய்து வரும் நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில்  முருகனின் அருள் வேண்டி பால் குடங்கள் ஏந்தி வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கும் ஆலயத்தில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற வந்திருந்தனர்.


ஆயிரக் கணக்கான பக்தர்களின் தாகத்தையும் பசியையும் போக்கிட  பீரோ இன்டர்கிராசி அமானா சிலாங்கூர், மேரு சட்ட மன்ற மக்கள் சேவை மையம், பீரோ இன்டர்கிராசி அவான் நேசனல் மற்றும் சிலாங்கூர் ரெக்கிரியாசி சமூக நலனபிவிருத்தி சங்கம் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் தண்ணீர்ப் பந்தலுடன் உணவு உபசரிப்புடன் நேர்த்தியாக தாம் வழி நடத்தியதாக கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினரும் அமானா நேசனல் தேசிய மகளிர் தலைவியுமான புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


பங்குனி உத்திரத் திருவிழாவில் நடைபெற்ற தண்ணீர்ப் பந்தல் நிகழ்ச்சி வெற்றி பெற உதவிக் கரம் நீட்டிய பேரு சட்ட மன்ற உறுப்பினர் உஸ்தாஷா மரியம் அப்துல் ரஷிட், பீரோ இன்டர்கிராசி அமானா சிலாங்கூர் மாநில த் தலைவர் பிரங்கி கோ எங் கீ, மேரு பிகேஎம் தலைவர் அப்துல் ரசாக் அப்துல் ரஷிட், காப்பார் அமானா ஒருங்கிணைப்பாளர் ஹலிம் ரெட்சுவான், கிள்ளான் அரச நகர மன்ற உறுப்பினர் புவான் அனிஸ் சுர்யானி, மேரு இந்திய சமூகத் தலைவர் வாசுதேவன்,


காப்பார் பீரோ இன்டர்கிராசி அமானா தலைவர் சுந்தர், மேரு பிகேஎம் அதிகாரி ருத்ரபதி முனியாண்டி, காப்பார் பீரோ இன்டர்கிராசி அமானா தலைவர் ஜோன் பிலிப், கோத்தா ராஜா மடானி மக்கள் பிரதிநிதி கிருஷ்ணன் ரோய், துணைத் தலைவி திருமதி பார்வதி முத்துக் கண்ணு, செயலாளர் திருமதி செல்வி முருகையா, திருமதி நிர்மலா, திருமதி கவிதா தியாகு மற்றும் அதன் சேவையாளர்களின் அபரிமிதமான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சியை தாம் வெற்றிகரமாக  நடத்தியதாக புஷ்பா ராஜன் அலை ஒளியிடம் கூறினார்.


திருமுருகன் அருளால் தண்ணீர்ப் பந்தல் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததோடு , இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்தி வடிவில் அனைவரும் அறியும் வகையில் வெளி கொணர்ந்து தரும் அலை ஒளி ஊடகம் நிறுவன நிர்வாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுமத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதோடு அதன் வளர்ச்சிக்கும் தம்மால் இயன்ற உதவிகளை நிச்சயம் முன்னெடுத்து வழங்கிடுவேன் என்று புஷ்பா ராஜன் உறுதி அளித்தார்.


Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News