Alaioli
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் தேங்கி நிற்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் முழுமைப் பெற பங்களிப்பு தேவை.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோல சிலாங்கூர் ஏப்ரல் 3.  வளர்ச்சியை நோக்கி ப் பயணித்துக் கொண்டிருக்கும் கோல சிலாங்கூர் மாவட்ட ரீதியில் தேங்கி நிற்கும் சில மேம்பாட்டுத் திட்டங்கள் விரைவாக முழுமை பெற போதுமான கண்காணிப்பும் நடவடிக்கையும் அதற்கான பங்களிப்பும் அவசியம் தேவை என்று இன்று காலையில் இங்கு சிறப்பு கூட்ட அறையில், 3/2026 கூட்ட அறிக்கைபடி விவாதிக்கப் பட்டதாக கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மக்கள் நலன் கருதி தொடங்கப் பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக பூர்த்தி அடைந்தால் மட்டுமே, மக்களுக்கான சேவைகள் முழுமை பெறும் என்று கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் தலைவர் துவான் முகமட் அனாஃப்பி பஸ்ரி கூட்டத்தில் முன் வைத்த கோரிக்கைகள் முழுமை பெற அமலாக்கப் பிரிவினர் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பணிகள் துரிதமாக  செயல் பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையாக வெற்றி பெற அனைவரது பங்களிப்பும் ஒத்துழைப்பும் ஆதரவும் தொடரும் என்று உறுதி அளித்ததாக புஷ்பா ராஜன் அலை ஒளியிடம் கூறினார்.

Post Image

Leave a Comment
Trending News