Alaioli
பினாங்கு மாநில அரசின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு! திரளானப் பொது மக்கள் பங்கேற்பு!

பினாங்கு ஏப் 3-பினாங்கு மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஹரிராயா  திறந்த இல்ல உபசரிப்பு  நிகழ்ச்சியில் மாநிலத்தின்  முக்கியப் பிரமுகர்கள் பலருடன்  ஏராளமானப் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று, இதன் உற்சாகக் கொண்டாட்டத்தை குதூகலமாக மிளிரச் செய்தனர்.


தலைமை விருந்தினராக  மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ  உத்தாமா ஹஜி ரம்லி ஙா தலிப்  கலந்து கொண்ட வேளையில், அவருடன் கௌரவப் பிரமுகர்களின் பங்கேற்பும் விழாவை பன்மடங்காக பிரகாசமாக்கியது.


பினாங்கு மாநகர் மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, விழாவில் கலந்து கொண்ட மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் தம்பதியருக்கும் சியோங் சீ ஹாங் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில்  உரை நிகழ்த்திய முதலாம் நிலை துணை முதல்வர் மாநிலத்தின்  முன்னேற்றத்திற்கு அனைத்து  சமூகத்தினருக்கும் பங்குண்டு என்றும், இந்நிலை தொடர்வதற்கு சமூக ஒற்றுமை நீடித்து  நிலைத்திருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சுவையான பற்பல உணவுகளும்  இன்னிசைக் கலைஞர்கள் பலரது   கலாச்சார ரீதியிலான ஆடல்  பாடல் நிகழ்ச்சிகளும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் இனிமை குன்றாமல் அமைந்திருந்ததால், வருகையளித்திருந்தோர் பலர் பேருவகையில் திளைத்து இன்பக் கடலில் மூழ்கினர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News