Alaioli
மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப மாது தமிழ்ச் செல்விக்கு பாப்பா ராய்டு கருணைமிக்க உதவி

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 19-  மழை நேரத்தில் எதிர்பாராமல் மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்திய குடும்ப மாது திருமதி தமிழ்ச் செல்வியின் நிலையை பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன் மற்றும் சுங்கை மங்கீஸ் கிராமத் தலைவர் மூலம் தமது கவனத்திற்கு கொண்டு வரப் பட்ட தகவலை அறிந்த மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு ஆறுதல் கூறியதுடன் அவசரத் தேவைக்கு உதவித் தொகையும் எடுத்து வழங்கினார்.


சுங்கை மங்கீஸ் வட்டாரத்தில் உள்ள பண்டார் சுங்கை மாஸ் அடுக்ககத்தில் வாழ்ந்து வரும் தமிழ்ச் செல்வி, மின்னல் தாக்கியதில் உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டு அதற்கான உரிய சிகிச்சைகளைப் பெற்று தற்போது வீட்டில் இருந்து வருகிறார் என்று பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மின்னல் காரணமாக நோயுற்று இருக்கும் தமிழ்ச் செல்விக்கு மாவட்ட சமூக நலனபிவிருத்தி இலாகா மூலம் மாதந்தோறும் 250 ரிங்கிட் பெறுவதற்கான நடவடிக்கைகளை பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையம் முன்னெடுத்து செயல்படுத்தியுள்ளதாக பாப்பா ராய்டு கூறினார். 


எதிர்பாராத பாதிப்பால் சிரமத்தை எதிர் நோக்கி வரும் தமிழ்ச் செல்விக்கு தேவையான உதவிகள் முன்னெடுக்கப்படும் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு தெரிவித்தார்; இந்த நிகழ்ச்சியில் அவரது துணைவியார் திருமதி மகேஸ்வரியும் உடனிருந்தார்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News