Alaioli
ஜெஞ்ஜாரோம் பால சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி கவசத்தை 12 மணி நேரம் இடைவிடாது பக்தர்கள் பாராயணம் செய்து சாதனை-பாப்பா ராய்டு பாராட்டு

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 19 - இங்கு, ஜெஞ்ஜாரோம் அருள் மிகு பால சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரளாக பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசத்தை 12 மணி நேரம் இடை விடாது பாராயணம் செய்து சாதனை படைத்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கு, ஆலய நிர்வாகத்தினர் அழைப்பின் பேரில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் இவ்வட்டாரத்தில் வசித்து வரும் தமிழ் ப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து சாதனைப் படைத்ததை தாம் மனம் திறந்து வெகுவாக பாராட்டுவதாக அவர் கூறினார்.


ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பாப்பா ராய்டுவும் அவரது துணைவியார் திருமதி மகேஸ்வரியும் ஆலயத்தில் கௌரவிக்கப்பட்டனர்.


மாணவர்கள் மத்தியில் இந்து சமய நெறி பக்தி மார்க்கம் சிறந்தோங்க பெற்றோர்கள் அவர்களுக்கு வழி காட்டியதாக இருந்து வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று பாப்பா ராய்டு அலை ஒளி ஊடகம் வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News