Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங்- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ்ஷாவை மோசமாக சித்தரிப்பது போன்ற அமைப்பில் அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்ட நபரை உடனடியாகக் கைது செய்து விசாரிப்பதோடு அந்த நபரிடம் உட் நோக்கம் இருப்பின் தடுப்புக் காவலில் வைத்து இதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று திங்கட்கிழமை மாலையில் கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தமது ஆதரவாளர்களுடன் புகார் ஒன்றை தாம் செய்தததாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்த ப் புகார் செய்யும் நடவடிக்கையில் தம்மோடு பணியாற்றி வரும் நகராண்மைக் கழக உறுப்பினர் பன்னீர் செல்வம் மற்றும் சிலரும் சிலாங்கூர் சுல்தானை அவமதித்த நபர் அல்லது அவனது கூட்டாளிகளைத் தேடிப் பிடித்து உரிய நடவடிக்கை மற்றும் தண்டனையை வழங்கும் நோக்கத்தில் காவல் நிலையத்தில் அவரவரும் தனித்தனியே புகார் செய்தததாகக் குறிப்பிட்டார்.

முகநூல் பக்கத்தில் பதிவேற்றி சிலாங்கூர் சுல்தானை அவமதித்தது மிகவும் அத்துமீறல் செயல் என்பதால் போலீசார் தங்களது பாணியில் அந்த நபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று உமா நந்தினி அலை ஒளி வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.
முகநூலில் மோசமான பதிவை செய்த மனிதரை, விசாரித்து விட்டோம் என்று அலட்சியமான பதிலை மட்டும் வெளியிடாமல் அந்நபரின் பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கும் கும்பலையும் கூண்டோடு பிடித்து தேவையான தண்டனைகளை வழங்கும்படி உமா நந்தினி கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் சுல்தானை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள அந்தக் காட்சியை பதிவேற்றம் செய்த நபரின் இழிச் செயலை புகார் செய்த எங்கள் கவனத்திற்கும் அடிக்கடி தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு உமா நந்தினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.- Alaiolinews
சிலாங்கூர்
Anwar potong rambut di kedai, netizen puji kacak
பினாங்கு
இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் வழிகாட்டி கருத்தரங்கு
சிலாங்கூர்
மாநில அரசின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம், மே தினத்தன்று இரவு பந்திங் மாரியம்மன் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெறும்!-பாப்பா ராய்டு அறிவிப்பு
பகாங்
Pegawai Kanan Polis ditahan kes rasuah RM64,000 lindungi kegiatan pusat hiburan tidak berlesen
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் அமைதியற்ற வழிபாட்டுத் தலங்கள் ( RITK) தொடர்பான தரவும் விளக்கமும்- பாப்பா ராய்டு தகவல்
சிலாங்கூர்
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை முகநூலில் அவமதித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்- பாப்பா ராய்டு வேண்டுகோள்
திருக்கோவில்
சித்திராப் பௌர்ணமி திருவிழாவில் ஜாலான் செலாட்-ஜாலான் மகாராணி சாலைகள் மூடல் ; மாவட்டப் போலீஸ் தலைவர்- உதவி ஆணையர் சுவா கோக் லியான்
சிலாங்கூர்
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்ட நபருக்கு எதிராக பந்திங் போலீஸ் நிலையத்தில் புகார்