Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், ஏப்ரல் 28 - மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ்ஷாவை மோசமாக சித்தரிப்பது போன்ற அமைப்பில் முகநூல் பக்கத்தில் பதிவேற்றி அவமதித்த நபர் அல்லது அவனது கும்பலை நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் செல்ல முடியாமல் இருக்கும் வகையில் உடனடியாக தேடித் பிடித்து கைது செய்து கூடுதல் பட்ச தண்டனைகளை காவல் துறையினர் வழங்க வேண்டும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
மாநில ஆட்சியாளரை அவமதிக்கும் அதே வேளையில் மனதைப் புண்படுத்தும் பதிவுகளை பதிவேற்றி, எதுவும் தெரியாதது போல் பதுங்கி இருக்கும் நபரை காவல் துறையினர் கைது செய்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஊடக வியலாளர்கள் மத்தியில் நிறுத்தி, அந்த நபரின் பின்னணியை வெளி கொணரும் முயற்சியில் காவல் துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மலாய் ஆட்சியாளர்கள் இந்த நாட்டின் அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப் பட்டவர்கள். நாட்டின் நிலைத் தன்மைக்கும் அடித்தளமாக இருந்து செயல்பட்டு வருபவர்கள்.
மாநிலத்தை வழி நடத்தி வரும் குறுநில மன்னர்களை இழிவுபடுத்தும் வகையில் யாரேனும் இனி வரும் காலங்களில் செயல்படுவார்களேயானால் காவல் துறையினர் மேற்கொள்ளும் தண்டனைகள் கடுமையை இருக்க வேண்டும் என்றும் பாப்பா ராய்டு அலை ஒளி வாயிலாக தமது கருத்தை வெளியிட்டார்.
முக நூலில் தனது முகத்தை மறைத்துக் கொண்டு சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பதிவேற்றம் செய்த அந்த நபரை முகத்தை வெளி உலகிற்குப் படம் பிடித்துக் காட்டி, உணர்த்தும்படி காவல் துறையினர் பணி அமைய வேண்டும் என்றும் பாப்பா ராய்டு தெரிவித்தார்.- Alaiolinews
சிலாங்கூர்
Anwar potong rambut di kedai, netizen puji kacak
பினாங்கு
இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் வழிகாட்டி கருத்தரங்கு
சிலாங்கூர்
மாநில அரசின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம், மே தினத்தன்று இரவு பந்திங் மாரியம்மன் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெறும்!-பாப்பா ராய்டு அறிவிப்பு
பகாங்
Pegawai Kanan Polis ditahan kes rasuah RM64,000 lindungi kegiatan pusat hiburan tidak berlesen
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் அமைதியற்ற வழிபாட்டுத் தலங்கள் ( RITK) தொடர்பான தரவும் விளக்கமும்- பாப்பா ராய்டு தகவல்
சிலாங்கூர்
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை முகநூலில் அவமதித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்- பாப்பா ராய்டு வேண்டுகோள்
திருக்கோவில்
சித்திராப் பௌர்ணமி திருவிழாவில் ஜாலான் செலாட்-ஜாலான் மகாராணி சாலைகள் மூடல் ; மாவட்டப் போலீஸ் தலைவர்- உதவி ஆணையர் சுவா கோக் லியான்
சிலாங்கூர்
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்ட நபருக்கு எதிராக பந்திங் போலீஸ் நிலையத்தில் புகார்