Alaioli
இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் வழிகாட்டி கருத்தரங்கு

சத்யா பிரான்சிஸ்

பினாங்கு ஆயர் ஈத்தாம்,  ஏப்ரல் 28 - பினாங்கு இந்தியச் சமூகத்தைச் சார்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் வழிகாட்டு கருத்தரங்கு,  ஜனநாயக செயல் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட்டுறவு தொழில் முனைவர் மேம்பாட்டு அமைச்சினால் நடத்தப்பட்டது. 



இந்திய சமூகத் தொழில் முனைவர் மேம்பாட்டு திட்டம்: (ஸ்பூமி (  spumi) குறித்து விரிவானத் தகவல்களை வழங்கும் நோக்கத்தைக் கொண்டு இந்த கூட்டம்  இன்று பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை ஆயுர் ஈத்தாம்  எம்பிகேகே மண்டபத்தில் நடைபெற்றது. 


பினாங்கு மாநிலத்தில் இந்திய சிறு,  நடுத்தரத் தொழில் முனைவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ள, எப்படி உதவ முடியும் , அவர்கள் எவ்வாறு  வங்கி கடன் உதவி திட்டத்தில் பங்கெடுக்க முடியும் போன்ற தெளிவான ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. 


பினாங்கு, பேரா  பகுதிகளில் இருந்து ஜனநாயக செயல் கட்சியின் அதிகாரிகளும் உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.


ஹமன்னா  இக்தியார்,  மலேசியா  எஸ். எம். இ. கோர்ப்,  எஸ்.எம்.ஈ. வங்கி, பேஃங்  ராக்யாட், தெக்குன் மலேசிய ஆகிய நிறுவனங்களில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டு சிறு,  நடுத்தர தொழில் முனைவர்கள் எவ்வாறு கடன் உதவி பெற முடியும்.


அவர்கள் வங்கி கடனுதவி பெற எந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். எத்தகைய ஆவணங்களை கொண்டு  வர வேண்டும் போன்ற விளக்கங்களைத் தெளிவாகக் கூறினார்கள். 




ஹமன்னா  இக்தியார் மலேசியா அமைப்பிலிருந்து முகமத் ஆஷிக் பின் அப்பாஸ்  எந்த ஒரு  வங்கி கணக்கும் இல்லாமல், எந்த ஆவணமும் இல்லாமல்,  தங்களின் சிறு தொழிலுக்கு எப்படி கடன் உதவி பெற முடியும் என்பது  குறித்து விளக்கம் அளித்தார்.


அவருடன் 017-4105253 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கடலுதவி பெறுவதற்கான எல்லா தகவல்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளார்.


புதிய தலைமுறை ஊக்க அமைப்பின் ஆலோசகராக செயல்பட்டு வரும் டி. எஸ். காளியப்பன் நிகழ்ச்சியை வழி நடத்தியதோடு சிறு கைத்தொழில் வர்த்தகம் செய்ய விரும்பும் இந்தியர்கள் குறிப்பாக பெண்மணிகள் தங்கள் வட்டார சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களை மற்றும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முன்வர வேண்டும்.


இது போன்ற அரிய வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறு தொழிலை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்எனக் கூறினார். 


இதுபோன்ற சிறு தொழில் முனைவர்களுக்கான விளக்கக் கூட்டங்களை நடத்தி வரும் திரு விமலனை 011-2671-2802 தொடர்பு கொண்டால் மேலும் பல விவரங்களைத் தருவதற்கு தயாராக இருக்கிறார் என  காளியப்பன் கூறினார்.


இதுபோன்று விளக்கக் கூட்டங்கள் தொடர்ந்து பேராக்,  பினாங்கு மாநிலங்களில்  நடத்தப்படும் என்றும் கூறினார்.


கூட்டுறவு தொழில் முனைவர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் அளித்த ஆதரவினால் ஊக்கத்தினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. 


மேலும் ஈப்போ புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.- Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News