Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், ஏப்ரல் 29 - சிலாங்கூர் மாநில அரசின் ஏகோபித்த ஏற்பாட்டில் வரும் 1.5.2026 வெள்ளிக்கிழமை மே தினத்தன்று மாலை 7 மணியளவில், பந்திங் நகரை ஒட்டி அமைந்துள்ள தாமான் செரி புத்ரா ஜெயா மக்கள் குடியிருப்புப் பகுதியில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் கலை கலாசாரம் பண்பாடு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சியாக நடை பெற விருப்பதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
ஆலயத் தலைவர் கே.குமார் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் கலைவிழா குறித்த நேரத்தில் தொடங்கும் என்று அவர் கூறினார்.
மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் நல்லாசியுடன் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் அழைக்கப் பட்ட பிரமுகர்கள், தாமான் செரி புத்ரா குடியிருப்பாளர்கள், கலந்து கொள்வர் என்றும் பாப்பா ராய்டு அலை ஒளியிடம் தெரிவித்தார்.
நடைபெறவிருக்கும் கலைவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாகப் பரிசளிப்பும் இடம் பெறும் என்றும் அவர் கூறினார்.- Alaiolinews

சிலாங்கூர்
Anwar potong rambut di kedai, netizen puji kacak
பினாங்கு
இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் வழிகாட்டி கருத்தரங்கு
சிலாங்கூர்
மாநில அரசின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம், மே தினத்தன்று இரவு பந்திங் மாரியம்மன் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெறும்!-பாப்பா ராய்டு அறிவிப்பு
பகாங்
Pegawai Kanan Polis ditahan kes rasuah RM64,000 lindungi kegiatan pusat hiburan tidak berlesen
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் அமைதியற்ற வழிபாட்டுத் தலங்கள் ( RITK) தொடர்பான தரவும் விளக்கமும்- பாப்பா ராய்டு தகவல்
சிலாங்கூர்
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை முகநூலில் அவமதித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்- பாப்பா ராய்டு வேண்டுகோள்
திருக்கோவில்
சித்திராப் பௌர்ணமி திருவிழாவில் ஜாலான் செலாட்-ஜாலான் மகாராணி சாலைகள் மூடல் ; மாவட்டப் போலீஸ் தலைவர்- உதவி ஆணையர் சுவா கோக் லியான்
சிலாங்கூர்
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்ட நபருக்கு எதிராக பந்திங் போலீஸ் நிலையத்தில் புகார்