Alaioli
சித்திராப் பௌர்ணமி திருவிழாவில் ஜாலான் செலாட்-ஜாலான் மகாராணி சாலைகள் மூடல் ; மாவட்டப் போலீஸ் தலைவர்- உதவி ஆணையர் சுவா கோக் லியான்

டிகே.மூர்த்தி

தெலுக் இந்தான், ஏப்ரல் 28- சித்ரா பௌர்ணமி திருவிழா வரும் 01.05.2026 வெள்ளிக்கிழமை தெலுக் இந்தான் நகரில் நடைபெறுகிறது.


இது தொடர்பாக அரச மலேசிய காவல் துறை (PDRM) திருவிழா முழுமைப் பெறும் காலம் வரை பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாலை வாகனப்  போக்குவரத்து சீராகச் செல்வதற்கும், அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளனர் என மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சுவா கோக் லியான் ஊடகத்தார்களிடம் கூறினார். 


தவிர, திருவிழாவில் மக்கள் கூடும் பகுதிகளில் குற்றத் தடுப்பு போலீசார் தீவிரமாகவும் கண்காணிப்பதுடன், அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.


அந்நிலையில், சாலை போக்குவரத்துக் கட்டுப்பாடு நடவடிக்கையின் ஆய்வின்படி, ஜாலான் மகாராணி மற்றும் ஜாலான் செலாட் ஆகிய இவ்விரு சாலைகள், 01.05.2026 அன்று காலை 7.00 மணி முதல் மறு நாள் 02.05.2026 மதியம் 2.00 மணி வரை தற்கலிகமாக மூடப்படுகிறது. 


அதனால், பொது மக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடல் அவசியம். அதன் மூலம் போக்குவரத்துப் பிரச்சினையிலிருந்து தவிர்க்க முடியும். மேலும், இவ்விரு சாலைகளுக்கு பதிலாக மாற்று சாலைகளைப் பயன்படுத்தும்படியும், அந்தந்த இடங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


அத்தகைய நிலையில், திருவிழா சுமுகமாக நடைபெறுவதையும், சாலைப் பயணர்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு என்பது வரவேற்கப்படுகிறது என்றும் நினைவூட்டினார்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News