Alaioli
கோயில் வரிசையில் கூடாரங்கள் என்ற முட்டுக்கட்டை ; ஆலயத்தின் சார்பில் டத்தோ இராமச்சந்திரன் புகார்..!

டிகே.மூர்த்தி

தெலுக் இந்தான், ஏப்ரல் 29- இங்குள்ள நகரத்தார்களின் அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சித்திராப் பௌர்ணமி திருவிழா நாளை மறுநாள் 01.05.2026 வெள்ளிக்கிழமை விமரிசையுடன் நடைபெறுவதற்கு ஆலய நிருவாகம் முன்னெடுத்துள்ளனர்.


அந்நிலையில், திருவிழாவுக்கு இன்னும் 24 மணி நேரமே எஞ்சியுள்ளது. இதனிடையே கோயில் அமைந்துள்ள வரிசையில் சாலையோரம் சட்டவிரோதமாக தற்காலிகக் கூடாரங்கள் என்ற முட்டுக்கட்டை போட்டுள்ளனர் என்றும் ஆலய ஆலோசகரும், தெலுக் இந்தான் மஇகா தொகுதி முன்னாள் தலைவருமான டத்தோ இராமச்சந்திரன் மூக்கன் கூறினார். 


இந்த முட்டுக்கட்டை கூடாரங்களால், ஆலய பணிக்கு மட்டுமல்லாது, காவடி, பால் குடக்  காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கும் ஆலையத்தை நாடிச் செல்லும்போது அவர்கள் கூட்ட நெரிச்சலில் சிக்கித் தவிக்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்படலாம்,இல்லை என்று நிராகரிக்க முடியாது.


மேலும், இது தெலுக் இந்தான் ஊராட்சி மன்றத்தின் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டதற்கு நிகராகும். கோயில் வரிசையில் எந்தவொரு கூடாரங்கள் போடக்கூடாது என்று ஊராட்சி மன்றம் உத்தரவு வழங்கியும் ஏன் இந்த நிலை ஏற்படுத்துகின்றனர் என்பது தெரியவில்லை என சிதம்பரம்பிள்ளை தமிழ்ப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் இராமச்சந்திரன் சுட்டிக்காட்டினார். 


இச்சம்பவம் குறித்த புகார் ஊராட்சியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சட்டவிரோத கூடாரங்களை அமைத்துள்ள காரணக்களுக்காக ஊராட்சி சரியான நடவடிக்கை எடுக்கும் என்று ஆலய சார்பில் பேசும் நான் நம்புகிறேன்.


கோயில் திருவிழாவில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து சட்டத்தை கடைபிடித்தால் மற்றவர்கள் நம்மை மதிக்கக்கூடும். ஒற்றுமை இல்லையெனில் பிறர் நம்முடைய சமய விழாவில் எதிர்மறையாக விமர்சனம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


இது நிற்க, இந்து சமயத்தின் அடையாளத்தை மெய்பிப்பது இது போன்ற கோயில் திருவிழா தான் என்பது கண்கூடு. மேலும், கோயில் கோபுரம் பக்தர்கள் பார்க்கும் வண்ணம் இருத்தல் அவசியமாகும் என எடுத்துரைத்தார்.


இன்று காலையில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்த பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வூ காஹ் லியோங்கிற்கு சித்திராப் பௌர்ணமி குறித்த விளக்கத்தையும் டத்தோ இராமச்சந்திரன் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News