Alaioli
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறந்த அரசு தனியார் சேவையாளர்களுக்கு விருது கௌரவிப்பு

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம் ஏப்ரல் 29 - உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்படும் மே முதல் நாளை வெகு விமரிசையாக மாநில அளவில் வரவேற்கும் விதமாக வரும் 4.5.2026  திங்கள் அன்று காலை 8 மணி தொடக்கம்,  மாநில அரசு செயலகத்தின் டேவான் ஜூப்ளி பேராக் ஆடிட்டோரியத்தில் மாலை 4 மணி வரை நீடிக்கும் ஹரி பெகெர்ஜா சிறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு நடவடிக்கைகள் சிறந்த அரசு தனியார் சேவையாளர்களுக்கு விருதும் கௌரவிப்பு அம்சங்களும் இடம் பெறும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தகவல் தெரிவித்தார்.



அதே வேளையில், மாநில அளவில் செயல்படும் பல நிறுவனங்களின் முகப்பிடங்கள் ஆங்காங்கே அமையப் பெற்று பொதுமக்கள் வசதிக்காக திறந்திருக்கும் என்றும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு கூறினார்.


மாநில அரசின் ஏற்பாட்டில் உழைப்பாளர் தினத்தை வெகு விமரிசையாக நடைபெற அரசுப் பணியாளர்கள் பங்களிப்பும் ஒத்துழைப்பும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


உழைப்பாளர்கள் வழங்கிய அர்ப்பணிப்பும் தியாகமும் நாட்டை வளம் நிறைந்த செழுமையான பூமியாக மாற்றியமைத்தக் காரணத்தால், அரசு சேவையில் தனியார் பணிமனையில் சிறந்து விளங்கும் சேவையாளர்கள் மாநில அரசின் தேர்வுக் குழுவால் அடையாளம் காணப்பட்டு அன்றைய நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டு  கௌரவிக்கப் படுவர் என்ற இனிப்பான செய்தியையும் பாப்பா ராய்டு அலை ஒளியிடம் குறிப்பிட்டார்.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News