Alaioli
கோலாலம்பூர் ஏப்ரல் 30 2008-நாளை, ஏப்ரல் 30, 2026, மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சிக்குரிய நாயகரான “டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன்” அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கின்றோம். அவரின் வாழ்வும் போராட்டங்களும் மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரே நேரத்தில் விழிப்பும், விடுதலையும் வழங்கிய மாபெரும் சொந்தமாகும் என மலேசிய ஐபிஎப் கட்சியின் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு விடியலின் தூதர்:டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன், சாதாரண மனிதனாகத் துவங்கி, தன்னுடைய விடாமுயற்சியாலும் உறுதியாலும் மலேசியத் தமிழர்களின் உரிமைக்காக ஓங்கி நின்ற தலைவர் ஆனார். All Malaysian Indian Progressive Front (IPF) எனும் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கி, "சமத்துவம், உரிமை, நியாயம்" என்பன மூன்று தூண்களாகக் கொண்டு, ஒரு புதிய அரசியல் இயல்பை மலேசிய மண்ணில் விதைத்தார்.
அவரின் முக்கியமான அரசியல் கொள்கை, "*கெஞ்சிக் கேட்பது பிச்சை, தட்டி கேட்பது உரிமை*" என்ற கூற்றின் மூலமாக, தமிழர்களுக்கு தங்களுடைய உரிமைகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் மனப்பாங்கை உருவாக்கியது. இது ஒரு முழுமையான மனச்சாணக்கியத்தையும், அடிமைத்தனத்திலிருந்து விடுபடும் அறிவுத்தூண்டும் உரையாடலாக அமைந்தது.
அரசியல் பாசிசத்திற்கே எதிராக:அரசியல் பாசிசம், இனவேறுபாடுகள், சமூக அநீதிகள் போன்றவை மலேசியத் தமிழர்களை பின் தள்ளிய காலகட்டத்தில், டான் ஸ்ரீ பண்டிதன் அவர்கள் தனிமையில் போராடினார். அதிகாரத்திற்குப் பணிவதில்லை, ஆனால் மக்களுக்காகத் தியாகம் செய்யத் தயார் என்ற தன்னலமற்ற போக்கை அவர் எடுத்துக்காட்டினார்.
அவர் உருவாக்கிய ஐபிஎப், அதன் ஆரம்பத்திலிருந்தே, "மக்களின் ஆற்றல் மக்கள் ஒற்றுமை" என்ற நம்பிக்கையோடு வளர்ந்தது. ஐபிஎப்பின் வழிமுறைகளும் செயற்பாடுகளும் மலேசிய இந்தியச் சமூகத்திற்குப் புதிய திசையைக் காட்டின
சிலாங்கூர்
குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
சிலாங்கூர்
வாத நோயால் அவதியுறும் நோர்வானி துணைவர் நலம் பெற புஷ்பா ராஜனின் மனித நேய உதவிகள்
மலேசியா
மலேசியத் தமிழர்களின் விடியலின் முன்னோடி: டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன்
கோலாலம்பூர்
மலேசியத் தமிழர்களின் விடியலின் முன்னோடி: டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புக் கட்டுரை.
சிலாங்கூர்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறந்த அரசு தனியார் சேவையாளர்களுக்கு விருது கௌரவிப்பு
சிலாங்கூர்
மடானி அரசின் மித்ரா வாயிலாக கோலலங்காட்டில் 7 இந்து ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் மானியம்- ஹரிதாஸ் பாராட்டு
பேராக்
கோயில் வரிசையில் கூடாரங்கள் என்ற முட்டுக்கட்டை ; ஆலயத்தின் சார்பில் டத்தோ இராமச்சந்திரன் புகார்..!
பேராக்
டத்தோ சிவநேசனின் செயல்பாட்டால் தமிழ் வளர்க்கும் ஶ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளி புதுப்பொலிவை கண்டது.