Alaioli
மடானி அரசின் மித்ரா வாயிலாக கோலலங்காட்டில் 7 இந்து ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் மானியம்- ஹரிதாஸ் பாராட்டு

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 29-  மடானி அரசின் மித்ரா வாயிலாக கோலலங்காட் மாவட்ட ரீதியில் செயல்படும் 7 இந்து ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் செயல்படும் மித்ரா மூலம் கோலலங்காட் மாவட்ட இந்து ஆலயங்கள் வளர்ச்சிக்கு மானியம் எடுத்து வழங்கிய ரமணனுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.


அதே வேளையில், கடந்த ஆண்டில் 5 இந்து ஆலயங்கள் மானியம் பெற்றதாக ஹரிதாஸ் அலை ஒளியிடம் கூறினார்.


ஆலய நிர்வாகத்தினர் நிதியைக் கொண்டு முக்கிய பிரச்சினைகளைத் தீர்வு காண கவனமாக செலவிட வேண்டும் என்றும் ஹரிதாஸ் ஆலோசனையை முன் வைத்தார்.


தேவையற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து பின்னர் அதனால் விரயம் அதிகமாவதைத் தடுக்கும் வகையில் நிர்வாகத்தினர் முறையான திட்டமிடல் மூலம் ஆலய நிர்வாகத்தை நேரிய வழியில் நடத்திச் செல்லும்படி அவர் கேட்டுக் கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் பன்னீர் செல்வம் குப்பன் உடனிருந்தார்.- Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News