Alaioli
எஸ். எஸ்.மணிமாறன்
கோல சிலாங்கூர் ஏப்ரல் 29. மக்கள் குடியிருப்புப் பகுதிகள், நகர்ப்புற சாலையோர குப்பைத் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகளை கே டிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளக் கண்காணிக்கும் பணிகளை நகராண்மைக் கழகத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று காலையில் இங்கு நடைபெற்ற வாராந்திரக் கூட்டத்தில் தாம் இது குறித்து விளக்கம் அளித்ததோடு அதற்கான ஆலோசனைகளையும் முன் வைத்ததாக கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
புதிதாக இதற்கான குத்தகையை எடுத்த கேடி இபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன பொது நடவடிக்கை நிர்வாகி நாஷர் அப்துல் ராவோப், புஷ்பா ராஜனின் ஆலோசனைகள் சரியாக இருப்பதால், இந்த ப் பிரச்சினை கவனத்தில் கொள்ளப்படும் என்று கூட்டத்தில் தமது கருத்தை முன் வைத்தார்.

அதே வேளையில், குப்பைகள் சேகரிப்பு நடவடிக்கைத் தலைவர் அஸான், இந்த நல்ல ஆலோசனையை தாம் வரவேற்பதாக அவர் கூறினார்.
மக்கள் குடியிருப்புப் பகுதிகளில், குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் அந்நிய நாட்டவர்கள் சில இடங்களில் குப்பைகளைத் தாமதமாக எடுப்பதும், மேலும் முழுமையாக எடுக்காமல் காலம் தாழ்த்தி சேகரிக்க வருவதால், குப்பைகள் குவிந்து கிடக்கும் சேகரிப்புப் பகுதிகளில் இருந்து பலத்த காற்றின் காரணமாக முடை நாற்றம் வீசி வருவதையும் குடியிருப்பாளர்கள் சிலர் தம்மிடம் புகார் தெரிவித்திருந்த தகவலை புஷ்பா ராஜன் கூட்டத்தில் முன் வைத்துப் பேசினார்.
இதற்கான தீர்வும் நடவடிக்கையும் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.-Alaiolinews

சிலாங்கூர்
குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
சிலாங்கூர்
வாத நோயால் அவதியுறும் நோர்வானி துணைவர் நலம் பெற புஷ்பா ராஜனின் மனித நேய உதவிகள்
மலேசியா
மலேசியத் தமிழர்களின் விடியலின் முன்னோடி: டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன்
கோலாலம்பூர்
மலேசியத் தமிழர்களின் விடியலின் முன்னோடி: டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புக் கட்டுரை.
சிலாங்கூர்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறந்த அரசு தனியார் சேவையாளர்களுக்கு விருது கௌரவிப்பு
சிலாங்கூர்
மடானி அரசின் மித்ரா வாயிலாக கோலலங்காட்டில் 7 இந்து ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் மானியம்- ஹரிதாஸ் பாராட்டு
பேராக்
கோயில் வரிசையில் கூடாரங்கள் என்ற முட்டுக்கட்டை ; ஆலயத்தின் சார்பில் டத்தோ இராமச்சந்திரன் புகார்..!
பேராக்
டத்தோ சிவநேசனின் செயல்பாட்டால் தமிழ் வளர்க்கும் ஶ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளி புதுப்பொலிவை கண்டது.