Alaioli
சிவநேசனின் தலைமையில் கோவில்கள் காக்கப்படுகின்றன - ஆலய நிர்வாகம் புகழாரம்!!

பேரா மாநில ஆலயங்கள் மாண்புமிகு அ.சிவநேசனின் தலைமையில் நனிச் சிறப்பாக காக்கப்படுவதாகவும் இந்து ஆலயங்களுக்கான உரிமைகளும் நிலைநிறுத்தப்படுவதாகவும் ஜாலான் சித்தியவான்,ரூபானா தோட்டத் தேவிஸ்ரீ மகா துர்கா தேவஸ்தான நிர்வாகத்தினர் புகழாராம் சூட்டினர்.


கடந்தக்காலங்கள் போல் இல்லாமல் சிவநேசன் ஆட்சிகுழு உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து இம்மாநிலத்தின் ஆலயங்கள் சார்ந்த சிக்கல்களுக்கு தொடர்ந்து நன் தீர்வு கிடைத்து வருவது பெருமிதமாக இருப்பதாகவும் கூறிய அவர்கள் அண்மையக்காலமாய் ஆலயங்களுக்கு நிலப்பட்டா கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்யும் அவரது செயல்பாடு காலத்தை கடந்து நம் அடையாளத்தை பதிவு செய்யும் வரலாற்று பதிவாகவே தாங்கள் பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.


அதேவேளையில்,ஆலய விவகாரங்களில் அவரது செயல்பாடும் தூரநோக்கு பார்வையும் ஆக்கப்பூர்வமாக இருப்பதோடு இவரது வருகைக்கு பின்னரே இம்மாநிலத்தில் ஆலயங்கள் சார்ந்து முன்னெடுப்புகளும் மானியங்களும் சீராகவும் கட்டுகோப்போடும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர்கள் சிவநேசனின் அணுகுமுறையும் துரித நடவடிக்கையும் பேரா மாநில ஆலயங்களுக்கு விடிவெள்ளி என்றுதான் சொல்ல வேண்டும் என்றனர்.


முன்னதாக தங்களின் ஆலயம் தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளையும் அதனை முன்னெடுக்கு செயல்பாடுகள் குறித்தும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசனின்  ஆலோசனை எங்களுக்கு பெரும் வழிகாட்டியாக இருந்து வருவதாக கூறிய ஆலயத் தலைவர் திரு.பெ குணாளன் பேரா மாநில ஆலயங்கள் ஆட்சிகுழு உறுப்பினர் சிவநேசனின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டால் இம்மாநில ஆலயங்கள் எல்லாம் எந்த சிக்கலையும் எதிர்நோக்காமல் சிறப்பாக செயல்படும் என்றார்.


நூறு ஆண்டுகளைக் கடந்த தேவிஸ்ரீ மகா துர்கா ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கு ஏற்ற மானியத்தை சிவநேசன் வழங்கி வருவதாகவும் கடந்தாண்டு 30ஆயிரமும்,2023ஆம் ஆண்டில் 10 ஆயிரமும் அவர் வழங்கியதையும் குணாளம் நினைவுக்கூர்ந்தார்.


ஆலயம் மற்றும் சமயம் சார்ந்து மாண்புமிகு சிவநேசனின் முன்னெடுப்புன் செயல்பாடும் ஆக்கப்பூர்வமானது.அது பெரும் நன்மையை கொண்டு வரும் மாபெரும் செயல்திட்டம் என்பதை உணர்ந்து அனைத்து தரப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கினால் இம்மாநிலத்தில் அவ்விரு விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான தீர்வுகளும் நன்மைகளும் கிட்டும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


பீடோரில் சிவநேசனின் சேவை மையத்தில் வருண்டாந்திர திருவிழாவிற்கு அழைப்பு கொடுக்க வருகை புரிந்திருந்த போது அவர்கள் இதனை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment
Trending News