Alaioli
கோலலங்காட்டில் 383 பேருக்கு டெங்கி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்- மாவட்ட சுகாதார இலாகா அறிவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங்,ஏப்ரல் 16-   கோலலங்காட்டில் 383 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்று மாவட்ட சுகாதார இலாகா உயர் நிலை அதிகாரி டாக்டர் நோர்ஹயாத்தி மொக்தார் அலை ஒளியிடம் தெரிவித்தார்.


அதே வேளையில், பங்சாபுரி லங்காட் முர்னியில் நால்வரும் தாமான் பைடூரியில் இருவரும் தாமான் பெரிங்கினில் இருவரும் பண்டார் செரி ஏசானில் இருவரும் ஓலாக் லெம்பிட் தொழிற்சாலை பகுதியில் இருவரும் கடுமையான டெங்கி காய்ச்சல் காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் பந்திங் மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அவர்களுக்கு தொடர் மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வருவதாக அவர் கூறினார்.


டெங்கி காய்ச்சல் காரணமாக கோலலங்காட் மாவட்ட ரீதியில் ஒருவரும் சிலாங்கூர் மாநில அளவில் ஒன்பது நோயாளிகளும் மரணமுற்றனர் என்று டாக்டர் நோர்ஹயாத்தி அலை ஒளியிடம் தகவல் தெரிவித்தார்.


இவ்வட்டாரத்தில் டெங்கி காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் சுகாதார இலாகா ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்புப் பிரிவினர்  தற்போது மாலை நேரங்களில் மருந்து தெளிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.


மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றுச் சூழல் சுகாதாரத்தைப் பாதுகாக்க குடியிருப்பாளர்கள் கவனத்தில் கொண்டு உரிய கொத்தோங் ரோயோங் கூட்டுப் பணி நடவடிக்கைகளை செயல்படுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டார்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News