Alaioli
ஜூக்ரா கருமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத தீமிதி மகேஸ்வரத் திருவிழா

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 1- பந்திங் நகரை ஒட்டியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத தீமிதி மகேஸ்வர த் திருவிழா வரும் 2.5.2026 சனிக்கிழமை அன்று பல்வேறு சிறப்பு வழிபாடு பூஜை புனஸ்காரங்களுடன் நடைபெறவிருப்பதாக ஆலயத் தலைவர் எம்.பத்மநாதன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.




வரும் 23.4.2026 முதல் 1.5.2026 வரை உபய அன்பர்களின் பங்களிப்பும், 1.5.2026 அன்று இரவு கலை விழாவும் 3.5.2026 மற்றும் 4.5.2026 இரு தினங்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி அம்பிகை அலங்காரப் பவனியுடன் இரத ஊர்வலமும் 5.5.2026 அன்று ஆலயத்தில் அம்பிகை பொன்னூஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருட் காட்சியும் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் ஆலயத் திருவிழாவின் சில முக்கிய நிகழ்ச்சிகள் என்று பத்மநாதன் அலை ஒளியிடம் கூறினார்.


மேலதிக விபரங்களுக்கு...எம்.பத்மநாதன் ( ஆலயத் தலைவர்)....016 3078 514 - Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News