Alaioli
முற்போக்கு ஊதிய கொள்கை நிரந்திர தீர்வாகுமா? மனிதவள அமைச்சு விளக்க வேண்டுமென சிவநேசன் கோரிக்கை!!

சிவாலெனின்


பீடோர், டிச 05 - முற்போக்கு ஊதிய கொள்கையால் தொழிலாளர் ஊதியம் உயர்ந்திருப்பதாக மனிதவள அமைச்சர் சிம் மக்களவையில் தெரிவித்திருக்கும் தகவலை வரவேற்ற பேரா மாநில மனிதவளம், சுகாதாரம், ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன்  இத்திட்டம் நீண்டகால நகர்விற்குத் தீர்வாகுமா என்பதை அமைச்சு ஆராய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


அதேவேளையில், இத்திட்டம் புதிய ஊதிய கொள்கை அல்ல எனவும் இதற்கு முன்னர் கூட சில தனியார் துறைகளில் குறிப்பாக ஹொட்டல், கனரக வாகனம் சார்ந்த தொழில்களிலும் இந்த ஊக்கத்தொகை வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வந்துள்ளதாகவும் டத்தோ சிவநேசன் சுட்டிக்காண்பித்தார். இந்தப் புதிய ஊதிய கொள்கைக்காக அரசாங்கம் வெ.50 மில்லியனை ஒதுக்கியுள்ளது. அரசு இந்த நிதியை ஒதுக்காவிட்டால், இத்திட்டத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


கூடுதல் ஊதியன்,தொழிலாளர் வாழ்வாதாரம் சிறக்கும்,பொருளாதார நிலையில் தொழிலாளர் மேம்பாடு போன்ற காரணங்களுக்காக இத்திட்ட அமலாக்கம் செய்யப்பட்டாலும் வருங்காலத்தில் இத்திட்டத்தை முதலாளிகளே நடைமுறை படுத்துவார்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு என அரசு எதிர்பார்க்கும் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. முதலாளிகள் தங்களின் வருமானத்தைப் பெருக்க மட்டுமே இலக்குன்கொண்டிருப்பார்களே தவிர தொழிலாளர்களின் ஊதியம் உயர்வில் இல்லை என்று தொழிலாளர் வழக்கறிஞருமான சிவநேசன் தனது அனுபவத்தையும் பகிர்ந்தார்.


கடந்த காலங்களில் சில துறைகளில் அமலிலிருந்த ஊக்க ஊதியமும் குறைந்த பட்ச ஊதியம் அமலுக்கு வந்த பின்னர் கேள்விக்குறியாக மாறியது. அரசாங்கம் ஒதுக்கிய வெ.50 மில்லியன் நிதியுதவி இருக்கும் காரணத்தினால் மட்டுமே முதலாளிகள் இத்திட்டத்தில் தொடர்ந்து பங்கெடுக்கிறார்கள் என்பதையும் அவர் மேலும் விவரித்தார்.


மேலும்,தொழிலாளர் சட்டம் 1955இல் கூட வருடத்திற்கு தொழிலாளர் ஊதியத்தை உயர்த்தும் வரையறை இல்லை.முதலாளியும் தொழிற்சங்கமும் செய்து கொள்ளும் ஒப்பந்த பேச்சுவார்த்தை அடிப்படையில் தான் ஊதிய உயர்வு உட்பட பிற சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நினைவுறுத்திய தொழிற்சங்கவாதியுமான சிவநேசன் அந்த ஒப்பந்தம் மீறப்பட்டால் தொழிலியல் நீதிமன்றம் வாயிலாக தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கம் நன் தீர்வை பெற முடியும் என்பதையும் தெளிவுப்படுத்தினார்.


மக்களவையில் இதுவரை சுமார் 32ஆயிரம் தொழிலாளர்களுக்கு இந்தப் புதிய ஊதிய கொள்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு கிடைத்திருபதாக மனிதவள அமைச்சரின் கூற்றுக்கு தொழிற்சங்கம்,தொழிலாளர் வழக்கறிஞர்,மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் என  நீண்டக்கால  அனுபவத்தை கொண்டிருக்கும் டத்தோ சிவநேசன் இத்திட்டத்திற்கான தூரநோக்கு செயல்பாடு என்ன? நிரந்திர சாத்தியம் என்னவென்பதை அமைச்சர் விளக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


தொடர்ந்து கருத்துரைத்த சிவநேசன் நிரந்திரமாக முதலாளிகள் தொழிலாளர்களுக்கு முற்போக்கு ஊதிய கொள்கையின் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்க வேண்டுமானால் அதனை தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஒரு சட்டமாக அமலப்டுத்தி அதனை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் எனவும் அது மட்டுமே தொழிலாளர்களின் ஊக்க ஊதியத்தை நிலைநிறுத்துமென்ற சாத்தியத்தையும் எடுத்துரைத்தார்.


எனவே, மனிதவள அமைச்சர் இவ்விவகாரத்தில் ஆய்ந்து நுண்ணியல் திட்டங்களோடு சட்டமாக்கி நடைமுறைப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனவும் ஆலோசனைக் கூறினார்.

Leave a Comment
Trending News