Alaioli
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!

டிகே.மூர்த்தி,

சித்தியவான், மார்ச் 5-மலேசியாவில் மாநிலங்களவை குறிப்பாக பேரா ஆட்சிக்குழுவில் இந்திய சமூகத்தின் நலப்பிரிவு என்றதோர் அங்கீகாரம் என்பது மாநில முதல்வர் டத்தோஸ்ரீ சராணி முகமது முன்னெடுப்பு அடிப்படையில் அந்தப் பொறுப்பை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கத்திடம் வழங்கப்பட்டது. அதுநாள் தொடக்கம், ஆலய விவகாரங்கள், பதிவு இலாகா (ROS), அரசாங்க நிலத்தில் வீடுகள், இந்து மயானங்கள், இஸ்லாம் அல்லாதாருக்கு நவீன மின் சுடலை, ஆலயங்களுக்கு முனீஸ்வரன்-மதுரைவீரன்) மாற்று நிலம் வழங்கி மாநில இந்து சமூகத்திற்கு ஒரு பாதுகாப்பாகவும்-சட்டபூர்வமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. 


தவிர, ஆலயங்களுக்கு நிதி மேலாண்மை, ஆலய நிலங்களை சட்டபூர்வமாக பதிவு செய்தல், ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தல், உதாரணமாக மாநில அரசாங்க நிதியின் மூலம்  ஆண்டுதோறும் மாநிலத்தில் பெரிய அளவில் திருமுருகன் மாநாடு நடத்துதல், தமிழ்ப்பள்ளி மாணவர் (கற்றல் கற்பித்தல்) கல்வி முன்னேற்றம், ஆலய குடமுழுக்கு மற்றும் ஆலய சார்பில் மூத்தோர் இல்லம் அமைக்க நிதி வழங்கி சிறப்பித்து தருகிறார். மேலும், ஆலய வழிபாடுகள், ஆலய திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் போன்ற இந்துமத வைபவங்கள் உள்நாட்டு குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் தான் வழிநடத்த வேண்டும் என்ற கடப்பாட்டை டத்தோ சிவநேசன் உறுதியாகவும் கடைப்பிடிக்கப்படுகிறார். இது பேரா மாநில இந்து சமூகத்திற்கு கிடைக்கப்பெற்ற காரியசித்தியாகும். 


அடுத்து, மலேசியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் 1906 ஆண்டிலிருந்தே பினாங்கு மாநிலத்தில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் மாநில அரசின் மேற்பார்வையில் அன்றும் இன்றும் தொடர்கிறது. இதன் மூலம் பினாங்கிலுள்ள ஆலயங்கள் (பினாங்கு தண்ணீர் மலை தவிர்த்து) மற்றும் அதன் சொத்துகளை  நிர்வகிப்பதுடன், கல்வி உட்பட மத மற்றும் சமூக நல வளர்ச்சி உள்ளிட்ட நோக்கங்களாகும். மேலும், இந்த அறக்கட்டளை வாரியத்தைப் பராமரிப்பதற்கும், மேற்பார்வையிடுவதற்கும் பினாங்கு இந்து அறக்கட்டளை என்பது கடந்த 01.01.1906 ஆம் ஆண்டில் சட்டபூர்வமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 


அத்தகைய நிலையில், பினாங்கு மாநிலத்தைப் போன்ற இந்து அறவாரியம் என்பது நாடு சார்ந்த எல்லா மாநிலங்களை அளவில் அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும். இதற்கு மாநில ஆட்சிக்குழு சட்டவிதிகளில் இந்து அறவாரியமும் பதிவுப் பெறவேண்டும் எனப் பேரா மாநில இந்துதர்ம மாமன்றம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணன் சுப்பிரமணியம் சுட்டினார்.

Leave a Comment
Trending News