Alaioli
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்;  முகமட் ஹஸ்ரி தகவல்.   எஸ்.எஸ்.மணிமாறன்

எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங். மார்ச் 5.  வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் கோலலங்காட் மாவட்ட ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள அரசின் மேம்பாட்டுத் திட்டங்கள் வரும் 2027 இல் படிப்படியாக ஒரு நிறைவுக்குக் கொண்டு வரப்படும் என்று கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் தலைவர் துவான் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் தகவல் வெளியிட்டார்.


இங்கு, நகராண்மைக் கழகத்தின் பீளேக் செம்பாக்கா கூனிங் சிறப்பு க்கூட்ட அறையில் 2/2026 கூட்டத் தொடரில் பேசிய அவர் மேற்கண்ட கருத்தைத் தொட்டு விளக்கம் அளித்தார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான, பெரிய சந்தை அருகில் 2027 இல் அமைய விருக்கும் பந்திங் பேருந்து முனையம் ( டெர்மினல்) மற்றும் சுங்கை சீடு தோட்டத்தின் முன்புறம் புதிய இடத்தில் அமைய விருக்கும் நகராண்மைக் கழகத்தின் புதிய அலுவலங்கள் குறித்தும் முகமட் ஹஸ்ரி பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அலை ஒளி செய்தியாளரிடம் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.


சிறப்பு அறையில் நடைபெற்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற நகராண்மைக் கழக உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம், நடேசன் சுப்ரமணி, பன்னீர் செல்வம் குப்பன் இளையராஜா பழனிச்சாமி ஆகியோர் 2027 இல் பூர்த்தி அடைய விருக்கும் அரசு திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அடுத்த ஆண்டில், பூர்த்தி அடைய விருப்பதாகச் சொல்லப்படும் பந்திங் பேருந்து நிலையத்தின் வாயிலாக நீண்ட காலமாக எதிர் பார்த்துக் காத்திருந்த பொது மக்கள் பலரும் மாணவர்களும் பயனைடைவர் என்று உமா நந்தினி தமது கருத்தை அலை ஒளியிடம் கூறினார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News