Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
ஷா ஆலம். மார்ச் 5. சில தினங்களாக ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு உயர்கல்வி மேற்கொண்டு வரும் மலேசிய மாணவர்களின் பாதுகாப்பையும் புகலிடத்தையும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுத்து வரும் விஸ்மா புத்ராவின் தொடர் நடவடிக்கைகளைத் தாம் மனம் திறந்துப் பாராட்டுவதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
உயர் கல்வி மேற்கொள்ள கடல் கடந்த நாடுகளில் தங்கியிருக்கும் மலேசிய மாணவர்கள் மட்டும் இன்றி அங்கு வியாபார நோக்கில் பயணித்து வரும் மலேசியர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள விஸ்மா புத்ரா களத்தில் இறங்கியுள்ளதாக அலை ஒளி செய்தியாளரிடம் அவர் கூறினார்.
இதன் தொடர்பில் விஸ்மா புத்ரா மேலதிக விவரங்களுக்காக வெளியிட்டுள்ள +603 8887 4570 என்ற எண்ணில் மலேசியர்கள் தொடர்பு கொண்டு போதிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளும்படி பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். தேவைப்படும் தகவல்களை விஸ்மா புத்ரா நடவடிக்கைக் குழு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளும்படி பாப்பா ராய்டு மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார்.
பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan