Alaioli
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்;   பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.

எஸ்.எஸ்.மணிமாறன் 

ஷா ஆலம். மார்ச் 5. உயர் கல்விக் கூடங்களில் தங்களுக்குப் பிடித்தமான தொழில் துறைகளில் கல்வி கற்று பட்டம் பெற்ற நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வெற்றியை நோக்கிப் பயணிக்கவிருக்கும் இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வாழ்த்துரை வழங்கிய அவர் மேற்கொண்ட கருத்தை வலியுறுத்தினார்.


உயர் கல்வியில் அதிக சிரத்தை எடுத்து,  படித்து முடித்து தற்போது பட்டம் பெறறுள்ள 30 பெண்கள், இந்திய சமூகத்தின் நலனுக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைய முன்வைத்த அவர் பின்னர் அலை ஒளி செய்தியாளரிடம் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் மறுமலர்ச்சியைக் கொண்டு வரவிருக்கும் இவர்களால், இந்த சமூகம் நிச்சயம் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் என்று தாம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாக பிரகாஷ் அலை ஒளியிடம் கூறினார்.


இந்தப் பட்டமளிப்பு விழாவை சிறப்பாக வழிநடத்திய அவியேஷன் ஆசியா ஆலோசனை மன்ற நிறுவன ஏற்பாட்டுக் குழுவினருக்கு இந்திய மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News