Alaioli
மாணவர்களின் வளமான வாழ்வை உறுதி செய்வது வாசிக்கும் பழக்கமே. துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறுகிறார்.

டிகே மூர்த்தி 

கோலசிலாங்கூர், டிச 5 - கோலசிலாங்கூர் மாவட்டத்தில் உள்ளிட்ட தமிழ்ப்பள்ளிகளில் ஓப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும்.  கடந்த 1927 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. நூறு ஆண்டுகள் நிறைவு விழாவை எதிர்நோக்கியுள்ள இப்பள்ளியில் 27 மாணவர்களும் 7ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு காலங்களில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் முழுத் தேர்ச்சியை எட்டியுள்ளது. மாவட்ட அளவிலான செந்தமிழ் விழாவை நடத்த முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட பள்ளியாகும்.


நேற்று இப்பள்ளியில் நடைபெற்ற நேர்த்தி நிறை விழா மற்றும் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவுக்கு ஒற்றுமை துறையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சிறப்புரையாற்றினார்.

தற்போது முதலாம் ஆண்டில் 7 மாணவர்கள் உள்ளனர். அதுவே 17 மாணவர்கள் பயின்றால் ஒற்றுமை அரசின் சார்பில் அம்மாணவர்களின் போக்குவரத்து செலவுகள் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்படும் என்ற  உறுதிமொழி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தின் அவசியத்தையும் சுட்டினார். வாசிப்பு பழக்கம் இல்லை என்றால், மாணவர்களின் அறிவு வளர்ச்சி தடைபடும். எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலைத் தருவது வாசிப்பு பழக்கமே என்றும் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.

இப்பள்ளி வளாகம்‌ மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன். இத்தருணத்தில் ஆசிரியர்களையும் பொதுப்பணியாளர்களின் கைவண்ணத்தைக் கண்டேன் என்று பள்ளிக்கு புகழாரம் சூட்டினார் துணையமைச்சர்.

Post Image

Leave a Comment
Trending News