Alaioli
2123 பேருக்கு பசார் ரமடான் நோன்புப் பெருநாள் சந்தைக்கான பெர்மிட்டுகள் வழங்கப் பட்டுள்ளன; அமிருடின் ஷாரி தகவல்

 எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம் பிப்.13  வரவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அதற்கு முன்பாக பசார் ரமடான்  சந்தைகளை வழி நடத்த 2123 சிறு தொழில் வியாபாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் வியாபாரம் நடத்த அதற்கான பெர்மிட்டுகள் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.


இங்கு, ஷா ஆலம் எம்பிஎஸ்ஏ கொன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷா ஆலம் பண்டாராயா அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட நோன்புப் பெருநாள் சந்தை வியாபார உரிமங்களை வழங்கிய நிகழ்ச்சியில் அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். ஷா ஆலம் வட்டாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 35 இடங்களில் நோன்புப் பெருநாள் சந்தைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் மந்திரி பெசார் அமிருடின் தெரிவித்தார்.


நோன்புப் பெருநாள் சந்தையில் வைக்கப்படும் உணவுகளின் தூய்மை, சுத்தம், பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆலோசனையை அவர் முன் வைத்தார். அதே வேளையில் பணியில் இருந்து வரும் அமலாக்கப் பிரிவினர் நோன்புப் பெருநாள் கால சந்தைக்குப் பரிசோதனைக்கு வரும் போது வியாபாரிகள் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற கருத்தையும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் வெளியிட்டார்.


மாநில விளையாட்டு மன்றத்தின் தலைவர் துவான் முகமட் நஸ்வான் ஹலிமி, டத்தோ பாண்டார் டத்தோ ஹாஜி முகமட் ஃபவுஸி, துணை டத்தோ பாண்டார் புவான் சாஃப்ரியா முகமட் அட்ஸ்ஹார், மற்றும் அழைக்கப்பட்ட அரசு அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News