Alaioli
நிர்வாகத் திறன்மிக்க இளையோர் நியமனதாரர்களுக்கான 2026ஆம் ஆண்டின் வழிகாட்டி நூல் பினாங்கில் வெளியீடு!

பினாங்கு பிப்ரவரி 13 -பினாங்கு மாநிலத்தில் ஓர் அரசை வழி நடத்தும் ஆற்றல் திறன் கொண்ட, துடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வரும்,பினாங்கு மாநில இளைஞர் மேம்பாட்டுக் கழகம், அத்தகைய ரீதியிலான இளையோரை தயார்ப்படுத்தி, இங்கிருக்கும் அரசினராலேயே முறையான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும்நிலையில், அத்தகையோர் பயன்பெறும் வகையில், ஒரு வழிகாட்டி நூலை அண்மையில் இங்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.


இந்த சிறப்புமிக்க நூலினை மாநில இளைஞர் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் மற்றும் மாநிலத்தின் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் ஆகிய இருவரும்,முக்கியப் பிரமுகர்களாக வருகையளித்து வெளியிட்டதோடு, தற்காலத்தில் இளைஞர்களில் பலர் நிர்வாகத் திறன் கொண்டவர்களாக தங்களை மேம்படுத்திக் கொள்வதில்அதிக ஆர்வம் காட்டுவது தொடர்பில் ஒருசேர பாராட்டு தெரிவித்தனர்.


நிர்வாகத் திறன் கொண்ட ஆற்றல்மிக்க இளையோருக்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வுடன் கூடிய நேர்காணலில்,மொத்தம் 79 பேர் அபாரமிக்கவர்களாக தங்களை அடையாளப்படுத்தியதாகவும், ஆனால் இந்த ஆய்வின் வாயிலாக 40 பேருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அதிகாரப்பூர்வ நியமனத்தின் பேரில் ஒப்பந்தப்படுத்தப்பட்டத நினைவு  கூர்ந்த குமரேசன், சம்பந்தப்பட்ட  40 பேரும் கடந்த ஆண்டு  இறுதியில் நடைபெற்ற சட்டமன்றக்  கூட்டத்தின் சிறப்பு மாநாட்டில்  பங்கேற்று வாதத் திறமையை நன்று வெளிப்படுத்தயிருந்ததாகவும் குறிப்பிட்டார்.


சம்பந்தப்பட்ட 40 பேர் கொண்ட அமர்வு, இளைஞர்களை வாதத் திறனுடன் பேசுவதற்கும், துணிவுடன் விவாதிப்பதற்கும்  சந்தர்ப்பமளித்ததோடு விமர்சன சிந்தனை, முடிவெடுக்கும் திறன்,  குழுப்பணி மனப்பான்மை மற்றும்  விவேகத் திறனுடனும் உண்மைகளுடனும் உரையாடும் தைரியம் ஆகியவற்றையும் உடன் பயிற்றுவிக்க வகை செய்ததாகவும் கூறிய குமரேசன்,பற்பலகருத்துக்களை பரிமாறுவதிலும் எதிர்வாதம் புரிவதிலும் பேராளர்களாக சரியான  நுட்பங்களை அணுகுமுறையுடன் கையாள்வதற்கும், நிறைவடைந்த சட்டமன்ற மாநாட்டுக் கூட்டம் தக்கதோர் பயிற்றுக் கூடமாக விளங்கியிருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.


ஒரு தலைமைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக தத்தம் ஆற்றல் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள, சம்பந்தப்பட்ட இளையநிர்வாகத்தினர் தங்களதுத் திறனை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, இந்நிகழ்ச்சியில் கோரிக்கை விடுத்த டேனியல் கூய், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இளைஞர் சக்தியே முக்கியத் தூணாக துணை நிற்க முடியுமென்று நம்பிக்கை தெரிவித்ததோடு, அரசாங்க நிர்வாக அமைப்புகளைப் புரிந்து, மாற்று அம்சப்பரிந்துரைகளுக்கான எதிர்காலக் கொள்கைகளை உருவாக்குவதில், சிந்தனைத் திறன்மிக்க இத்தகு இளைஞர்களே, புதிய வலைத்தளங்களுக்கும் வழிகாணக் கூடிய மேதைகளாகத் திகழ முடியுமென்று புகழுரைத்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News