Alaioli
எதிர்கால உலகின் சாவியை ஏந்தும் மாணவர் - கோசா மன்றத்தின் சாதனை முன்னெடுப்பு.

அகல்யா

​பட்டர்வொர்த், பிப்.13 - தொழில்நுட்ப உலகில் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) என்பது இனி ஆடம்பரமல்ல, அதுவே அடிப்படைத் தேவை. அந்தத் தேவையைச் சரியாகக் கணித்து, தமிழ்ப்பள்ளி மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது பினாங்கு கோ சாரங்கபாணி மன்றம்.


​பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் முன்னிலையில், 6 மாத கால செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியை நிறைவு செய்த 30 மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பயிற்சியின் மே 2025 முதல் அக்டோபர் 2025 வரை (வார இறுதி வகுப்புகள்) தமிழ்ப்பள்ளி மாணவர்கள் (ஆண்டு 4 முதல் படிவம் 1 வரை).வசதிகள் - நவீன மடிக்கணினிகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய கற்றல் சூழல். திருமதி பாக்கியலெட்சுமி (தலைவர், பினாங்கு தாமரை மகளிர் மேம்பாட்டுச் சங்கம்).​\"தொழில்நுட்பப் புரட்சியில் நம் மாணவர்கள் என்று மாணவர்களை முன்னெடுத்து சென்றது.


சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு

​நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், கோசா மன்றத்தின் இந்தத் தொலைநோக்குச் சிந்தனையை வெகுவாகப் பாராட்டினார்.

உலகம் இன்று AI தொழில்நுட்பத்தால் மிக வேகமாக உருமாறி வருகிறது. எதிர்கால மனித வாழ்வியலில் இதன் தாக்கம் தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில், நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பத்திலேயே இந்தக் கதவைத் திறந்துவிட்ட கோசா மன்றத்தின் கல்விப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் நான் வழங்குவேன் என்று அவர் சூளுரைத்தார்.


​கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் - ​திரு. லிங்கேஸ்வரன் சர்மா – செபராங் பிறை மாநகர மன்ற உறுப்பினர். ​திருமதி பாக்கியலெட்சுமி – பினாங்கு தாமரை மகளிர் மேம்பாட்டுச் சங்கத் தலைவர்.திரளான பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.உலகில் தடம் பதிக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்: AI பயிற்சியில் பங்கேற்றதன் வழி எதிர்கால டிஜிட்டல் திறவியை கையில் ஏந்தி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News