Alaioli
 பினாங்கு மாநகராட்சியின் ஊழியர் ஒன்றியம் சார்பில் பள்ளிக்கூட உபகரணங்களுக்கான கொள்முதல் பற்றுச்சிட்டைகள்!

பினாங்கு பிப்ரவரி 13 பினாங்கு மாநாகராட்சியின் ஊழியர் ஒன்றியம் சார்பில், இதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு,பள்ளிக்கூட உபகரணங்களுக்கான கொள்முதல் பற்றுச்சிட்டைகள் வழங்கிய நிகழ்ச்சி, இங்கிருக்கும் கொம்தார் அரங்கத்தில், அதன்மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



இவ்வாண்டு முதலாம் வகுப்பு பயிலும் இச்சங்க உறுப்பினர்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 43 பேருக்கு மேற்படி பற்றுச்சிட்டைகள் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தொழிற்சங்கத் தலைவர் முகமட் சோப்ரி காதர் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர் ஜூரய்டா அர்ஷாத் ஆகிய இருவரும் முக்கியப் பிரமுகர்களாக வருகையளித்திருந்த வேளையில்,இதரப் பலத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.



பினாங்கு மாநகராட்சியின் இந்த ஊழியர் ஒன்றியம், ஒரு நீண்டகால அமைப்பாக செயல்படுவதாகவும் இதில் உறுப்பினர்களாக தங்களை பதிந்து கொண்டவர்கள் எதிர் கொள்ளும் சகலவிதமானப் பிரச்சனைகளைக் களைவதிலும்,உடனுக்குடன் அவற்றுக்கு தீர்வு காண்பதிலும், தாங்கள் சளைக்காமல் காரியமாற்றி வருவதாக இதன் தலைவராக வீற்றிருக்கும் சோப்ரி காதர் தெரிவித்தார்.



மாநில மாநகராட்சியில் பணி புரிகின்ற ஊழியர்கள் நலனுக்காக அவ்வப்போது குரல் எழுப்புவதிலும் பல்வேறு வழிகளில் உதவுவதிலும் துடிப்புடன் செயல்பட்டு வரும் இந்த ஒன்றியம் என்றும் தாராளஉணர்வுடன் செயல்படுவதிலும் அர்ப்பணத் தன்மையுடன், அக்கறையோடு பங்காற்றுவதிலும், ஓர் உன்னத அமைப்பாக திகழ்வதாக, இந்நிகழ்ச்சியில் ஊழியர்கள் சிலர் பாராட்டுத் தெரிவித்த வேளையில், இதன் நற்சேவைகள் மென்மேலும் தொடர வேண்டுமெனவும் வாழ்த்துரைத்தனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News