Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
பந்திங். பிப்.14. உலகில் அறிவியல் சார்ந்த மருத்துவம் மிகப் பட அதே வேளையில் வியப்பை அளிக்கும் வகையில் வளர்ச்சிக் கண்டிருந்த போதிலும், தனிமனிதரும் அவரவர் சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் பேணிக்காப்பது மிகவும் அவசியம் என்று மாநில சுகாதாரம் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் புவான் ஜாமாலியா ஜமாலுடின் அறிவுறுத்தினார்.
மேலும், தனிமனித சுகாதாரம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்து தொடரப்படுவதோடு, அது பொது நன்மைக்காக வெளி கொணரப்பட வேண்டும். பணம் அதிகம் இருப்பதால், வீட்டு வாசல் வரை தேடி வரும் ஃபாஸ்ட் ஃபுட் என்றழைக்கப்படும் அவசர உணவுகளை அவசரமாக ஆர்டர் செய்து பின்னர் அவசரமாக வரும் நோய்களால் அவதியுற்று, மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கும் வேளையில் ,
என்னைக் காப்பாற்றுங்கள் என்று நோயாளி மருத்துவரைக் கெஞ்சிக் கேட்கும் நிலைமையை மாற்றி கொண்டு மனிதர்கள் தங்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை விடுத்தார். இங்கு பந்திங் மருத்துவமனை பீளேக் கூலியாவில் நடைபெற்ற மருத்துவமனை வருகையாளர் வாரிய அதிகாரிகளுடனான ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜாமாலியா மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார். இந்த நாட்டில் மருத்துவத் துறை வளர்ச்சி கண்டிருந்த போதிலும், பல நூறு நோயாளிகளைக் கண்காணிக்க சில நூறு மருத்துவர்கள் மட்டுமே உள்ளதால், மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்திட சுகாதார அமைச்சரிடம் தாம் வேண்டுகோளை முன் வைத்துள்ளதாக அவர் கூறினார்.
கேள்வி நேரத்தின் போது, அலை ஒளி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, மாநில அளவில் காச நோய் தற்போது கட்டுப் பாட்டில் உள்ளது. மேலும் போதுமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஜாமாலியா விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பந்திங் மருத்துவமனை வருகையாளர் வாரிய அதிகாரி லாவ் கோக் ஹூவா, மோரிப் சட்ட மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan