Alaioli
 சாலை விபத்தில் 19 வயது சீன நாட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு, டிசம்பர் 4 ஜொகூர் பாரு – பொந்தியான் சாலையின் கிமீ 18 வீதி வளைவுச் சுரங்கப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 19 வயது சீன நாட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட காவல்துறை இடைக்கால    தலைவர் சூப்பிரண்டண்ட் அஸ்ரோல் அன்வர்   இன்று செய்தியாளர் அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்

இன்று காலை சுமார் 10.45 மணியளவில், ஹோண்டா வாரியோ 150 வகை மோட்டார் சைக்கிளில் பாரடைய்ம் மாலில் இருந்து யூ.திஎம் ஸ்கூடாய் திசைக்குச் சென்ற இளைஞர் ஒருவர், இடப்பக்கத்தில் லொரியை முந்த முயன்ற போது விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அந்த ஹினோ GH1JMPA வகை லோரியை 59 வயது உள்ளூர் நபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.

இடப்புறத்தில் லோரியை முந்த முயன்றபோதே, மோட்டார் சைக்கிள் லோரியின் இடது பின் சக்கரத்துடன் மோதி விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த மோதலில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைப்பகுதியில் காயம் அடைந்ததுடன், உட்புறக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலேயே மருத்துவப் பணியாளர்கள் உயிரிழப்பை உறுதிப்படுத்தினர். லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ், கவனக்குறைவான மற்றும் ஆபத்தான ஓட்டத்தால் மரணம் ஏற்பட்டது என்ற பிரிவில் காவல்துறை விசாரிக்கின்றனர்.

இந்த விபத்துக்குத் தொடர்பான தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது ஹபீஸ் பின் அமீனுத்தீன் (011-35807871) அவர்களைத் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Comment
Trending News