தென்கிழக்காசியாவில் புகழ்ப்பெற்ற Sangsang platform, incheon இல் நடைபெற்ற தென்கிழக்காசிய சர்வதேச ஆங்கில மொழி ஒலிம்பியாட்டில், கெடா சுங்கை பட்டாணி, பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளியினைச் சேர்ந்த 11 வயதான இளம் மாணவர் மஹாம்பிகை உமாஷங்கர், வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் மலேசியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
Global League of Winners (GLOW) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒலிம்பியாட், ஆங்கில மொழி திறனை ஊக்குவிப்பதோடு மாணவர்களிடையே கலாச்சார பரிமாற்றத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர் குறிப்பிடத்தக்கது.
மஹாம்பிகை, மலேசியாவிலிருந்து தேர்வாகி வெற்றி பெற்ற ஒரே தமிழ்ப்பள்ளி மாணவியாவார்.
இவரது ஆங்கிலத் திறமை, குறிப்பாக வாசிப்புப் புரிதல், சொற்களின் பொருள்களை உணர்தல், எழுத்துப்பிழைகளை அடையாளம் காணல், இலக்கணம், கட்டுரை எழுதுதல் போன்ற பலதரப்பட்ட பிரிவுகளில் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதால் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்று வாகை சூடியுள்ளார்.
மஹாம்பிகையின் வெற்றியானது தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதைப் பறைசாற்றுகிறது.
மேலும், மலேசிய இடைநிலைப் பள்ளியினைச் சேர்ந்த இந்திய மாணவர்களும் இப்போட்டியில் பங்கு பெற்று வாகை சூடியுள்ளனர்.
- தனியா ராஜேந்திரன் – SK (P) Methodist, ஈப்போ, பேராக்
- உஷேதா ராஜேந்திரன் – SMK (P) Methodist, ஈப்போ, பேராக்
- உஷானா ராஜேந்திரன் – SMK (P) Methodist, ஈப்போ, பேராக்
- ரகுநாதன் கணேசன் – ஸ்ரீ காரிங் இடைநிலைப்பள்ளி
சரியான வழிகாட்டலும் உழைப்பும் இருந்தால், உலகளாவிய மேடைகளில் வெற்றிகொண்டு சாதிக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.