Alaioli
மாநில அரசு செயலகத்தின் 90 பணியாளர்களுக்கு  200 ரிங்கிட் மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்; மந்திரி பெசார் அமிருடின் அன்பளிப்பு

எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம். மார்ச் 4.  சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தில் பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் 90 பணியாளர்களுக்குஇன்று ,இங்கு சுல்தான் சலாஹூடின் அப்துல் அஸிஸ் ஷா மண்டபத்தின் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு 200 ரிங்கிட் மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை எடுத்து வழங்கி ஹரிராயா வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.


மாநில அரசு இந்தப்பற்றுச் சீட்டுகளை முன்னெடுக்க 18 ஆயிரம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் எதிர் நோக்கும் சுமைகளைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கையை தாம் மேற்கொண்டதாக அவர் கூறினார்.


விரைவில் வரவிருக்கும் ஹரிராயா நோன்புப் பெருநாளுக்கு முன்பாக, இங்கே பணி செய்து வரும் அரசு ஊழியர்கள் வரும் 14.3.2026 முதல் 19.3.2026 வரை ஷா ஆலம் செக் ஷன் 13 இல் இருக்கும் லோட்டஸ் பாசாராயாவில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று நோன்புப் பெருநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை எடுத்து வழங்கிய மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளியிடம் தெரிவித்தார்.அரசு வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் அதிகாரிகளுக்கு இந்தப் பற்றுச் சீட்டுகள் வழங்கப் பட்டதாக அவர் கூறினார்.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News