Alaioli
அரசு தரப்பினர் இந்து வழிப்பாட்டுத் தலங்களை ஒரு காலத்தில் தகர்க்க முன் வருவார்களேயானால் இந்து பக்தர்கள் வீட்டை ஆலயமாக்கி வழிபாடுகள் நடத்தலாம்; வலைத் தளவாசி ஜெவர்ஷா மனம் திறந்த கருத்து.

எஸ்.எஸ்.மணிமாறன். 

கோலாலம்பூர். மார்ச் 4. அரசு தரப்பினர் இந்து வழிப்பாட்டு த் தலங்களை ஒரு காலத்தில் தகர்க்க முன் வருவார்களேயானால்,  இந்து பக்தர்கள் வேறு வழியின்றி தங்களது வீட்டையே ஆலயமாக்கி மணி அடித்து வழிபாடுகள் நடத்தி,  இறைவனுக்கு பிரசாதம் படைத்து அவரே ஒரு அர்ச்சகராக மாறி இறைக் கடமைகளை நிறைவேற்றலாம் என்று வலைத் தளவாசியான ஜேவருஷா தமது கருத்தை மனம் திறந்து வெளியிட்டுள்ளார்.


அதே வேளையில், பூஜை புனஸ்காரங்கள் வழிபாடுகள் முறையாக செய்யத் தெரியாதவர்கள், பூஜைகளை நேர்த்தியாக செய்யத் தெரிந்த பக்தர்கள் இல்லங்களில் வழிபாடுகளில் கலந்து கொண்டு வணங்கி வழிபட்டு பிரசாதம் பெற்றுச் செல்லலாம் என்ற நிலை அன்றைய கால கட்டத்தில் நிகழும் வாய்ப்புகள் பிரகாசமாக அமையக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.


அதே வேளையில், இந்து பக்தர்கள் யாருக்கும் எதிரிகள் அல்லர். இதன் மூலம், எந்தவிதப் பிரச்சினைகளும் இந்த நாட்டில் எதிர்காலத்தில் நடந்து விடாது என்பதால் தமது கருத்தை மனம் திறந்து முன்னெடுப்பதாக வலைத் தளவாசி ஜேவருஷா தெரிவித்துள்ளார். 


நாட்டின் ரூக்கூன் நெகாராவின் முதல் கோட்பாடான, ' இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் ' என்ற கோட்பாட்டை நாம் அதை வலுவாக மதித்து ஆதரிப்பதால், காலப்போக்கில் வழிப் பாட்டுத் தலங்கள் இல்லாது போகும்  சாத்தியம் இருக்குமானால் அவரவரும் தத்தம் வீடுகளில் வழிபாடுகளை நடத்துவது ஒரு தவறான நடவடிக்கை என்று யாரும் கேள்வி ஏதும் எழுப்ப முடியாது என்பதை நாமும் உணர்ந்ததால் இதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Comment
Trending News