Alaioli
பினாங்கு ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியில் சீனப் புத்தாண்டு விருந்தோம்பல்!

பினாங்கு மார்ச் 4 பினாங்கு மாநிலத்தின் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியில் நடத்தப்பட்ட சீனப் புத்தாண்டு திறந்த இல்ல பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் பல்லின சமூகங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, இங்கு பரிமாறப்பட்ட பல்சுவை உணவு வகைகளையும் கண்கவர் கலை நிகழ்ச்சியையும் ஒருசேர அனுபவித்து மகிழ்ந்தனர்.


இந்த சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் பொறுப்பாற்றி வரும் கோனி தான், விமரிசையாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் மற்றும் தஞ்சோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் லிம் ஹூய் யிங் ஆகிய இருவரும் பிரதானப் பிரமுகர்களாக வருகையளித்து இங்கு திரண்டிருந்த பொதுமக்கள் யாவருடனும் தங்களின் புத்தாண்டு களிப்பை பகிர்ந்து கொண்டனர்.


இந்த விருந்தோம்பலில் பொதுமக்கள் இரட்டிப்பு நன்மையைப் பெறும்வகையில் அதிர்ஷ்டக் குலுக்கல் அங்கமும் உடன் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில்,குழுமியிருந்தோர் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரம் மேலும் பெருக்கெடுத்தது. இத்தகையபொது வைபவங்களில் பங்கேற்கும் பல்லின மக்களின் ஒன்றுகூடல் சமூகத்தினரிடையே ஒற்றுமைக்கு ஆணிவேராக அமைவது குறித்து இந்நிகழ்ச்சியின் அரசியல் பிரமுகர்கள் யாவரும் ஒருசேர தங்களின் மனநிறைவை வெளிப்படுத்தினர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News