Alaioli
பினாங்கு பிராங்கின் மால் ரமலான் உணவுச் சந்தையை மாநில சுகாதாரத் துறையினருடன் மாநகர் மன்ற மேயர் நேரில் ஆய்வு!

பினாங்கு மார்ச் 4 ரமலான் மாதப் புனிதத்தை மாண்பெனப் போற்றும் வகையில் நாடெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள்நோற்று வரும் நோன்பை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே ரமலான் மாதச் சந்தைகளும், பற்பல உணவுக் கடைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவற்றின் மீதான சோதனை நடவடிக்கைகளில், சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஈடுபாடு காட்டி வருவது அறியத்தக்கதே!


அவ்வண்ணம் ஜோர்ஜ்டவுன் பகுதியிலுள்ள பிராங்கின் மால் உணவுச் சந்தையை, இங்கிருக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் மற்றும் பினாங்கு மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஃபாசிலா ஷேக் அலாவுதீன் நேற்று இங்கு ஓர் அதிகாரப்பூர்வ வருகையுடன் பார்வையிட்டார்.


இத்தகையதொரு கூட்டான கள ஆய்வு, இச்சந்தையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற உணவு வகைகள் யாவும் தரமுடன் இருப்பதை உறுதி செய்வதோடு, உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொது மக்கள்  மத்தியில் பரப்பும் அதே வேளையில்,  வணிகர்களுக்கும் மனநிறைவை  அளிப்பதற்கு வகை செய்யும்,  ஒரு பயனான முயற்சி என்ற  கண்ணோட்டத்திற்கும் வழியேற்படுத்துவதாகும்.மாநில ரீதியாக ஆங்காங்கே தொடங்கப்பட்டிருக்கும் மொத்த 1,256 ரமலான் உணவுக் கடைகளில், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏறத்தாழ 18 பகுதிகளில் கள ஆய்வுகளை நடத்தியிருக்கும் நிலையில், சுமார் 2,452 உணவு தயாரிப்பாளர்களிடம் பரிசோதன நடத்தப்பட்டு, சுகாதாரக் கல்வி வழங்கப்பட்டிருப்பதையும், இச்சோதனைகளில் 235 குற்றப் பதிவுகள் வாயிலாக 26,950 ரிங்கிட் அபராதத் தொகைகள் வசூலிக்கப்பட்டிருப்பதையும், சுகாதாரத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இந்த சுற்றுப்பயணச் சோதனை அமர்வில் சுகாதாரத் துறையினர், அபாயகர உணவின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, பொதுவில் பெறப்பட்ட புகார்களின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் கோட்பாட்டில், உணவுத் தரம், பொட்டலமிடுதல் மற்றும் முத்திரையிடுதல் ஆகியவையும் உள்ளடங்குமென்று சுகாதார வர்க்கத்தினர் தங்கள் நிலைப்பாட்டை  தெளிவுப்படுத்தியுள்ளனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News