Alaioli
வரும் ஜூன் 2026இல்  நாடாளுமன்ற அவையில் 2 தவணைக்கான( 10 ஆண்டுகள்) நாட்டின் பிரதமராக வகிக்கும் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்; டத்தோ ஃபாமி ஃபட்சில் அறிவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோலாலம்பூர். மார்ச் 4.  வரும் ஜூன் 2026 இல் அமைச்சரவைக் கூடும் நேரத்தில், நாடாளுமன்ற அவையில், பிரதமரின் பதவியை 10 ஆண்டுகளுக்கு ( 2 தவணைகள்) மட்டுமே கட்டுப் படுத்தும் அரசியல் சட்டம் மீதான திருத்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு டன் மீண்டும் தாக்கல் செய்ய.ப்படும் என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்சில் இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். 


நாடாளுமன்ற அவையில் இதை ஆதரித்து 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 32 பேர் அவைக்கு வரவே இல்லை. இதில் சிலர் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஏதேதோ காரணங்களை முன் வைத்தனர். எனினும், ஜூன் மாத வாக்கில் நடைபெற விருக்கும் நாடாளுமன்ற அவையில் மேற்கண்ட மசோதா தாக்கல் செய்வதோடு அடுத்த முறை இது போன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க கவனமாகவும் அதே வேளையில் கண்காணிப்புடன் நடை பெறும் என்றும் ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார். மற்ற விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

Leave a Comment
Trending News