Alaioli
புக்கிட் மெர்தாஜாம் ஜன 1 – இன்று பெர்மாத்தாங் திங்கி ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயம், பெர்மாத்தாங் திங்கி, சிம்பாங் அம்பாட் பகுதியில், ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயம் மற்றும் MHS (Malaysian Hindu Sangam) புக்கிட் மெர்தாஜாம் இந்து இணைந்து புத்தாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பெர்மாத்தாங் திங்கி ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயம், மலேசிய இந்து சங்கம் செயலவை உறுப்பினர்கள் சிறப்பாக நடத்தினர். மருத்துவ முகாம் (Medical Camp)குழந்தைகளுக்கான வண்ண ஓவியப் போட்டி (Children Coloring Contest) பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வி தொடர்பான விழிப்புணர்வு உஉரை ஆகியவை நடத்தப்பட்டது

மேலும், மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலத் தலைவர் திரு. விவேகரத்னம் தார்மன் அவர்கள் சிறப்பு உரையாற்றி, கல்வியின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார்.இந்த சிறப்பு விழாவில் புக்கிட் தென்கா சட்டமன்ற உறுப்பினர் கோய் அவர்களின் பிரதிநிதியாக திருமதி சர்மிளா கலந்துக்கொண்டனர்.

புத்தாண்டை சமூக நலன், கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுடன் இணைத்து கொண்டாடிய இந்த நிகழ்வு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இந்த புத்தாண்டு விழாவை ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயம் ஏற்பாடு செய்ததுடன், புக்கிட் மெர்தாஜாம் இந்து சங்கம் இணை ஆதரவு வழங்கியது .இந்த புத்தாண்டு விழாவில் ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலய தலைவர் ஜோசப் செல்வம்,ஆலய செயலாளர் எஸ்.பாலச்சந்தர், புக்கிட் மெர்தாஜாம் இந்து சங்க தலைவர் ஜோன் ஜெய்சன் மற்றும் சுற்று வட்டாரப் மக்கள் திரளாக கலந்துகொண்டதுடன்,நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் பரிசுகளை எடுத்து வழங்கினர்.


பினாங்கு
Kerajaan Pulau Pinang Lancar Dana Pembangunan Belia (DPB) 2026 Perkasakan Potensi Anak Muda
பினாங்கு
பினாங்கில் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கத்தில் மாநகர் மன்ற உறுப்பினர்களின் நோன்பு துறப்பு நிகழ்ச்சி!
புக்கிட் தாம்பூன்
சுங்கை பக்காப் அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகதில் கலந்துகொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு
பினாங்கு
மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை அனைத்து வட்டார கோவில்களுக்கும் சந்திப்புக் கூட்டம்
பந்திங்
நீண்ட வரலாற்றைக் கொண்ட கேரித் தீவு, மாணிக்க வாசகம் இந்தியர் கிராமத்திற்கு , கிராம அந்தஸ்தைப் பெற மாவட்ட நில இலாகா பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் நடவடிக்கை; ஹரிதாஸ் ராமசாமி தகவல்
கோலாலம்பூர்
அடுத்த ஆண்டில் முதலாம் வகுப்பில் கல்வி பயில ஆறு வயது மாணவர்கள் 351,789 பேர் பதிவு; துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ அறிவிப்பு.
கோலாலம்பூர்
நாடெங்கும் அரசு சுகாதார கிளினிக்குகளில் நீரிழிவு மையங்கள்; டாக்டர் சுல்கிப்ளி அமாட் அறிவிப்பு.
பந்திங்
கோலலங்காட் மாவட்ட வளர்ச்சியில் தமது பங்களிப்பு தொடரும்; பாப்பா ராய்டு உறுதி.